அந்நியன் படத்தில் பார்த்திருப்பீர்கள் விக்ரம் ரயிலில் பயணம் செய்யும் போது தரமற்ற உணவு வழங்கப்படுவதையும், தான் கொடுத்த பணத்திற்கு ஏற்ற உணவு பரிமாறவில்லை என்றும் பயணச்சீட்டு பரிசோதகரிடம் வாதிடும் காட்சியும் அதைத் தொடர்ந்து ரயில்வே உணவு தயாரிக்கும் குத்தகைகாரரை கொலை செய்வதையும். நம்மில் பலருக்கும்  பல தருணங்களில் இது நடந்திருக்கும் நாமும் இதை யாரிடம் சொல்லி அழுவது என்று வேண்டா வெறுப்பாக  கிடைத்ததை கொறித்து விட்டு அன்றோடு அதை மறந்து போய் இருப்போம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் அதன் கிளை நிறுவனமான CRIS  ( CENTRE FOR RAILWAY INFORMATION SYSTEM )வுடன் இனைந்து  வாடிக்கையாளர்களுக்கு ஒரு 24மணி நேர   சேவையை ஆரம்பிக்க உள்ளது. இதன் மூலம் உங்கள் உணவு உங்களுக்கு சரியாக இல்லை என்ற பட்சத்தில் இவர்கள் கொடுத்திருக்கும் 57886  என்ற  எண்ணில் குறுஞ்செய்தி (SMS) செய்தாலே போதும் இதன் பேரில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். உங்கள் குறை சீக்கிரம் களையப்படும்  என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.  இந்த சேவை டிசம்பர் மாதம் முதல் அமுலுக்கு வருகிறது. இந்த சேவை எந்த அளவுக்கு மக்களுக்கு நன்மையை பயக்கும் என்பது தெரியாது… நல்லதையே நினைப்போம்… நன்மையே நடக்கும்…

பின்னூட்டங்கள்
 1. எஸ். கே சொல்கிறார்:

  நல்ல பயனுள்ள தகவல்! ஏனெனில் பயணங்களில் இது ஒரு பெரும்பிரச்சினைதான்!

 2. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  மிகவும் நல்ல விஷயம். இந்தளவுக்கு மக்களுடன் இணைய திட்டமிட்டவர்களுக்கு நிச்சயம் பாராட்டுகள். நன்றி நண்பா.

  அதே போல சென்னை மின்சார ரயிலுக்காக கட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்ட கட்டிடங்களையும் பராமரித்தால் தேவலை. சிந்தாதிரிப்பேட்டை, இந்திரா நகர் ரயில் நிறுத்தங்கள் மிகவும் மோசமாக உள்ளன. மனிதக் கழிவுகளிலிருந்து திண்பண்டங்ள் வரை மிகவும் மோசமாக இருக்கிறது.

 3. சிவகுமார் சொல்கிறார்:

  இந்த பதிவின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி சந்துரு! தொடரட்டும் உங்கள் நற்பதிவுகளின் எண்ணிக்கை. வாழ்த்துகள்! ஒரு செய்தி: நான் பதிவுலகில் அடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே நீங்கள் என் பதிவகமான madrasminnal.blogspot.com ஐ follow செய்ததற்கு நன்றி. தற்போது நான் அதை நிறுத்திவிட்டு புதிதாக இரு பதிவுகளை துவங்கி எழுதி வருகிறேன். madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com. நேரம் இருப்பின் அதை பார்த்து விட்டு உங்கள் கருத்தினை சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்…..விடைபெறுகிறேன். மீண்டும் வாழ்த்துகள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s