படத்தின் தலைப்பை பார்த்து இதை ஒரு முழு நீள காதல் திரைப்படம் என்று நினைத்து திரையரங்கில் நுழைந்தால், இது ஒரு சாதாரண குடும்ப சித்திரம். நம்ம தமிழ் திரைப்படங்களில் குடும்ப சித்திரம் என்பது, உணர்ச்சி வயப்படும் வசனங்களும், செண்டிமெண்ட் காட்சிகளும் கொண்டதாகவே இதுவரை நமக்கு தரப்பட்டிருகிறது அதனால் இதை குடும்ப சித்திரம் என்ற வரையரைக்குள்ளும் எடுத்து வரமுடியாது. அப்போ கமலின் வழக்கமான நகைச்சுவை படம் என்று சொல்லலாமா? அதுவும் சொல்ல முடியாது நமக்கு நாமே கக்கத்தில் விரல் விட்டு சிரிப்பு மூட்டிக் கொண்டால்தான் உண்டு. இது ஆங்கிலத்தனமான குடும்ப திரைப்படம் (family drama) என்று வேண்டுமானால் சொல்லலாம்.

சரி  கதைக்கு வருவோம். மதன் என்கிற ஒரு தொழிலதிபர் அம்புஜா (நிஷா) என்ற நடிகையை காதலித்து  மனம் முடிக்க இருக்கிறார், இதற்கிடையில் அம்புவின் நடத்தை மீது சந்தேகம். அதற்காக துப்பறிய, மன்னார் என்ற கதாபாத்திரத்தை  உளவு பார்க்க அம்பு விடுமுறைக்கு செல்லும்போது உடன் அனுப்புகிறார், மின்சார கனவு பாணியில் மன்னாரே அம்புவைக் கரம் பிடிக்கிறார். இதுதான் படத்தின் ஒரு வரிக்கதை.

ரங் தே பசந்தி, மும்பை மேரி  ஜான், 3  இடியட்ஸ், அன்பே சிவம் போன்ற நல்ல திரைப்படங்களில் நடித்த அனுபவங்களை மாதவனின் நடிப்பில் பார்க்க முடிகிறது. சங்கீதாவின் நடிப்பும் சொல்லும்படியாக இருக்கிறது ஆனால் அது அந்த கதாபாத்திர வடிவமைப்பின் அழகு. சங்கீதாவின் மகனாக வரும் சிறுவனும் சொல்லும் படியாக நடித்திருக்கிறார். மொத்தத்தில் நடிப்பை பொறுத்தவரை எல்லோருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.

கதை ஏற்கனவே சொல்லிவிட்டேன், திரைக்கதைக்கு வருவோம்… நண்பர்கள் சிலர் முதல் பாதி நன்றாக உள்ளது இரண்டாம் பாதி அறுவை என்று கூறினர். என்னை பொறுத்தவரை ஒரு திரைப்படத்தை பாதி பாதியாக பார்க்க  சின்னத்திரை நாடகம் இல்லை. முதல் பாதி பாத்திரங்களை இடம் சுட்டி பொருள் விளக்கவே நேரம் சரியாக உள்ளது. கதையை கொஞ்சம் கூட நகர்த்தியதாக தெரியவில்லை. இரண்டாம் பாதி அவசர அவசரமாக படத்தை முடித்தது போல இருந்தது, இறுதிக் காட்சிக்கு ஆயத்தமாகும் காட்சிகள் நன்றாகவே இருந்தது ஆனால் இது கமலின் பழைய நகைச்சுவை படங்களின் பாதிப்பை அதிகம் உணர வைக்கிறது.

லைவ் ஆடியோ இந்த படத்திற்கு ஒரு நெகடிவ், சில இடங்களில் வசனங்கள் என்னவென்று புரியவே இல்லை. காட்சிமைப்பு அருமை, ஒளிப்பதிவாளருக்கு முதல் படம் என்றால் நம்பவே முடியாது. பாடல் காட்சிகள் சொல்லும்படியாக இல்லை.  காட்சியை திருப்பி போடும் reverse footage பாடல் நிறையபேருக்கு lipsync reverse இல்லாமல் இருப்பதை உணரவே முடியவில்லை. மெனக்கெட்டு செய்திருக்கிறார்கள் ஆனால் அதன் முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்வதிற்கில்லை. டைட்டானிக் கப்பல் போல ஒரு கப்பலில் படமாக்கப்பட்டிருக்கிறது படத்தின் பெரும் பகுதி. கண்ணுக்கு குளிர்ச்சி.

நிறைய நண்பர்கள், படத்தில் காட்சிகள் இணைப்பு வசனங்கள் அல்லது இணைப்பு காட்சிகள் இல்லாமல் இருப்பதை சுட்டிக் காட்டினார்கள். சிலர் இதை நான் லீனியர் வகையான திரைப்படத்திற்குண்டான பாணியில் படத்தின் காட்சிகளை  படத்தொகுப்பு செய்திருப்பதாகவும் கூறுகின்றார்கள், ஆனால் இதை ஒரு குறையாக கூற முடியாது. எல்லாவற்றையும் கூற திரைப்படம் எதற்கு கதாகாலட்சபம் போதுமே.

சரி இந்த படத்தில் கமலையும், இயக்குனர் ரவி குமாரையும் தேடி தேடி அலுத்தேவிட்டது எனக்கு. எந்த ஒரு காட்சியிலும் அவர்களின் முத்திரை தெரியவே இல்லை. பார்த்த களங்களோ, கேட்ட கதைகளோ, இல்லாமல் வெகு நேர்த்தியாக இளம் இயக்குனர்கள் கதைகளை தேர்வு செய்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இது வெறும் சாதாரண ஒரு திரைப்படம். மொத்தத்தில் அம்பு துளைத்தது நமக்கு தான், மேலும் அது அம்பு இல்லை ஆப்பு என்பதை கமல் படம்,  கே.எஸ். ரவிகுமார் படம்  என்ற எதிர்பார்ப்பில் போனவர்கள் நன்கு உணர்வார்கள்… 

இந்து மதத்தை கேவலப்படுத்தி ஒரு பாடல் வந்ததாக அதை கத்தரித்து விட்டார்களாம். ஆனால் தமிழ் தெரு பொறுக்கும்னு ஒரு வசனம். மொழியை கேவலப்படுத்துவதை கூட பொறுத்துக்கொள்வோம், மதத்தை கேவலப்படுத்துவதை விட்டு விட மாட்டோம்.,  ஏனென்றால் நாங்கள் எல்லோரும் கமல் போல பகுத்தறிவு வாதி… ஹி… ஹி….

பின்னூட்டங்கள்
 1. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  தமிழை கேவலப்படுத்தியதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம் உண்மை. தமிழனை காட்டுமிரண்டி என்று சொன்னால் நாம் தான் சகித்துக் கொள்கிறோம் என்பதால், இன்னும் சீண்டிப்பார்க்கின்றார்கள்.

  இந்து மதப் பாடல் எளிதாக கத்தரிக்கப்படவில்லை. படத்தினை திரையிட விடமாட்டோம் என்ற நிலைக்கு போன பின்தான் நிகழ்ந்தது. இந்த நிலை இருக்கும் போது மூன்று கடவுள்களை எள்ளி நகையாண்டிருக்கின்றார்கள். இதுவும் இல்லையென்றால் சுத்தம்.

  பாரட்ட வேண்டிய விசயம் அந்த தலைகீழாக ஓடும் பாடல்தான். மிகவும் ரசித்தேன்.

  • adhithakarikalan சொல்கிறார்:

   தமிழ், கல் தோன்றி மண் தோன்றா காலத்து மொழி என்பதாலும் அந்த சமயத்தில் காட்டுமிராண்டியாய் வாழ்ந்த மூத்த குடி என்பதை குறிக்க தமழனை காட்டுமிராண்டி என்று கூறுகிறார்கள் போலும்…

 2. படைப்பாளி சொல்கிறார்:

  தெளிவான விமர்சனம் அருமை..

 3. sr சொல்கிறார்:

  தமிழ் தெரு பொறுக்கும்னு என்று சொல்லும் வசனகர்த்தா கமல் தானும் ஒரு தமிழ் தெரு பொறிக்கி என்று ஒப்பு கொள்கிறாரோ என்னோவூ . இவர்களை தாம் நாம் சமுகம் அறிவு ஜீவிகள் என்று எண்ணுவது முட்டாள் தனம்

  • adhithakarikalan சொல்கிறார்:

   அறிவு ஜீவி என்பதற்கு வரையறையே நமக்கு தெரியாதே நண்பரே… நமக்கு புரியாத அல்லது தெரியாத விஷயங்கள் சொல்பவர்களை நாம் அறிவு ஜீவிகள்னு நினச்சிக்குறோம்…

 4. வேந்தன் சொல்கிறார்:

  தமிழ் தெரு பொறுக்கும்னு…………. நான் இந்த படத்தை பார்க்கவில்லை.. எனினும் மேற்கண்ட வசனம் படத்தில் இடம் பெற்றிருந்தால் அதை பார்க்ககூடிய சகிப்புத்தன்மையும் எனக்கு இல்லை. இந்த மொழி தான் எனக்கு உங்களிடம் எனது உணர்வை எடுத்துச்சொல்ல தாய்க்கும் மேலாக உதவுகிறது… மொழியை (அது எந்த மொழியாக இருந்தாலும்) இழிப்பவன் ஒரு பேடி. எந்த கீழான வேலையும் செய்ய கூடி ஒரு கீழான மனிதன்.

 5. K. Jayadev Das சொல்கிறார்:

  //அம்பு இல்லை ஆப்பு…// ha.. ha..ha…. Your way of writting is very humarous in the beginning. But later parts are not that good. Try the way you have begun.

 6. kumar சொல்கிறார்:

  விமர்சனம் அருமை.

  ஆப்புக்கு நூறுரூவா செலவு!?

 7. damildumil சொல்கிறார்:

  //ஐஸ்வர்யாவின் நடிப்பும் சொல்லும்படியாக இருக்கிறது ஆனால் அது அந்த கதாபாத்திரத்தின் வடிவமைப்பின் அழகு//

  யாருங்க அந்த ஐஸ்வர்யா ??????

 8. அப்பாதுரை சொல்கிறார்:

  கலைஞர் கருணாநிதி ‘காட்டுமிராண்டி’க்கு அப்படித் தான் விளக்கம் சொன்னார். மொழியின் தோற்றமே தமிழனிடம் தான் வந்தது என்கிறார். (முத்துக்குளியல் – கலைஞர் கருணாநிதி உரைத்தொகுப்பு)

  ‘தமிழ் தெருப்பொறுக்கும்’ என்பதில் தமிழுக்கு என்ன இழுக்கு, புரியவில்லையே?
  மதம் பற்றிய நக்கல் ரசிக்க முடிந்தது…

  • adhithakarikalan சொல்கிறார்:

   நன்றி தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும், கலைஞரின் உரைத்தொகுப்பை மேற்க்கோள் காட்டியதற்கு நன்றி.
   தமிழ் தெருப்பொறுக்கும் என்பதில் உங்களுக்கு எந்த இழுக்கும் தெரியவில்லை என்றால் மகிழ்ச்சி, பார்ப்பவர்களின் அல்லது கேட்பவர்களின் மனோபாவத்தை பொருத்தும், சொல்பவரைப் பொருத்தும் ஒரு வாக்கியத்தின் தன்மை மாறும்… கமல் எந்த அர்த்தத்தில் கூறினாரோ அது அவருக்குத் தான் வெளிச்சம்…

 9. Resultado Loteria சொல்கிறார்:

  This article expounded the subject well covered, very good!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s