சமீபத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி? படத்தை பார்த்து நண்பர்களிடம் அந்த படத்தை பற்றி விவாதித்து கொண்டிருக்கையில் ஒரு நண்பர் சொன்னார்  இதே  GENEREல  ஹிந்தியில் PYAR KA PANCHNAMAனு படம்  வந்திருக்கு பார்த்தீங்கலான்னு கேட்க உடனே பார்க்கணும்னு பிரியப்பட்டு பார்த்தேன்.

இந்த படத்தின் தலைப்பே வித்தியாசமானது பஞ்சநாமா-ங்கற வார்த்தைக்கு    ஹிந்தியில் POST MORTEM REPORTனு அர்த்தமாம், PYAR KA PUNCHNAMA னா POST MORTEM OF LOVE, வித்யசமா தானே இருக்கு… காதலில் சொதப்புவது எப்படி டாக்குமெண்டரி ஸ்டைல்ல எடுக்கப்பட்ட ஒரு காதல் கதை என்பது படம் பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும், இந்தப்படம் ரொமாண்டிக் காமெடி வகை.  IT நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று இளம் வாலிபர்கள் காதல் வலையில் சிக்குண்டு எப்படி தத்தளிக்கிறார்கள் என்பதே கதை. 

ரஜத், நிஷாந்த(லிக்கியுட்), சௌத்ரி என்ற மூன்று நண்பர்கள் ஒரே வீட்டில் தங்கி பணிபுரிகிறார்கள். ரஜத், நேஹா என்ற பெண்ணுடன் காதல் கொள்கிறான், அவளுடன் LIVING TOGETHER முறையில் குடும்பம் நடத்துகிறான், நாள் போகப்போக அந்த உறவுமுறை ரஜத்தை துன்பத்தில் தள்ளுகிறது. நிஷாந்த தன்னுடன் பணிபுரியும் சாரு என்ற பெண்ணுடன் காதல் கொள்கிறான், அவளுக்காக அவளுடைய பணியை இவனே பலமுறை செய்து தருகிறான், ஏறக்குறைய அவளுடைய காலிலேயே விழுந்து கிடக்கிறான் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவளுக்கு ஏற்கனவே ஒரு BOY FREIND இருப்பது தெரிந்தும் இவனுடைய காதலை அவள் ஏற்காத பிறகும் நட்பு என்ற போர்வையில் அவளை காதல் கொள்கிறான், இந்த விஷயம் தெரிந்தும் அவள் இவனை பயன்படுத்திக் கொள்கிறாள். அவளுடைய வேலைகளை செய்வது, இரவில் துணையாக வீடு வரை செல்வது, அவளுக்கு BEAUTY PARLOUR செலவு உட்பட இவனே செய்கிறான். சௌத்ரி, ரியா என்ற பெண்ணை காதல் கொள்கிறான் அவள் ஏற்கனவே LIVING TOGETHER RELATIONSHIPல் ஒருவனோடு 5 வருடம் இருந்தவள் அவர்களுக்குள் உள்ள இடைவெளியில் இவன்பால் மையல் கொள்கிறாள். சௌத்ரி, ரியா பழைய காதலனை மறந்துவிட்டாள் என்று நினைத்து அவளுடன் பழகுகிறான் ஆனால் நாட்பட நாட்பட ரியா இன்னும் பழைய காதலனோடு நாட்களை கழிப்பது தெரிய வருகிறது. இப்படி மூன்று பேர்களும் காதலின் பிடியில் சிக்கி பின் போதும்டா சாமின்னு அந்த பெண்களை விட்டு வருவதே மீதி கதை.

இந்தப் படத்தை பொறுத்த வரையில் காதல் என்பதே ஆண்களை கையகப்படுத்த பெண்கள் கையாளும் ஒரு ஆயுதமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள(செக்ஸ் உட்பட), தனக்கு துணையாய் ஒரு செக்யூரிட்டி வேலை பார்க்க, இப்படி நீண்டு கொண்டே போகிறது லிஸ்ட்.

படத்தின் ஒரு காட்சியில் மூன்று வாலிபர்களில் ஒருவன், இந்த பெண்கள் ஒரு காதல் தோல்விக்குப் பின் வெகு எளிதாக இன்னொருவனை கவிழ்த்து விடுகிறார்கள். நம்ம பசங்களுக்குள்ள ஒரு ஒற்றுமையே இல்லை, இப்படி பட்ட பெண்களை 2 வருடங்களுக்கு எந்த ஆணும் காதலிக்க கூடாது என்ற சட்டம் வரவேண்டும் என்ற வசனம் நகைச்சுவையாக இருந்தாலும் ஆண்களின் இயலாமையை நினைத்தால் கஷ்டமாகத் தான் இருக்கிறது. (பொதுவாக எதிர்பாலர் மேல் ஒரு மோகம் எல்லோருக்கும் இருக்கும், இது பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே அதிகமாக இருக்கிறது; காரணம், பெண்கள் சுலபமாக தனக்கு துணையை தேர்ந்து எடுக்க முடிகிறது. ஆனால் ஆண்கள் நிறைய போராட்டத்திற்கு பின்னே ஒரு பெண்ணின் மனதில் இடம் பெற முடிகிறது).

பெண்களை காதலிக்க ஆரம்பிக்கும் போது அவளுக்காக காத்திருப்பதும், ஏவல் பணி புரிவதும் சுகமாக இருக்க… நாள் போகப்போக காதலியை தவிர்ப்பதும் அவளை விட்டு தனியாக பிக்னிக் போக நினைத்து பின் அவரவர் தத்தம் காதலிகளோடு  கோவா சென்று அங்கே அவதிப்படுவதும் நல்ல காட்சி அமைப்பு. நல்ல திரைக்கதை, அருமையான கதாபாத்திரங்கள், விழுந்து விழுந்து சிரிப்பீர்கள் சில காட்சிகளில், பாடல்களும் நன்றாகவே உள்ளது.

மொத்தத்தில் இந்தக் கதை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது காரணம் பெண்கள் ஆண்களை அவ்வளவு துன்புறுத்துவது போல கதை உள்ளது. அரக்க குணம் கொண்டவள் பெண் என்பது போல சித்தரிக்கப்பட்டிருகிறது ஆண்களுக்கும் இந்தப் படம் பிடிக்க வாய்ப்பு இல்லை காரணம் இந்தப் படத்தில் வரும் நாயகர்கள் பெண்களின் காலடியில் விழுந்து கிடப்பது போலவே படம் முழுதும் உள்ளது. ஆண்மைத்தனம் என்று சொல்லக்கூடிய ஒரு விசயமும் இல்லை படத்தில்.

படத்தில் எனக்கு பிடித்த மிக முக்கியமான காட்சி உங்கள் பார்வைக்கு

பின்னூட்டங்கள்
  1. HOTLINKSIN.COM சொல்கிறார்:

    அருமையான விமர்சனம்… படம் பார்த்ததை விட அதிகமான உணர்வுகளை கொடுத்த விமர்சனம்…

  2. Askulaska சொல்கிறார்:

    http://www.askulaska.com

    இது ஒரு புதுவித இணைய பகிர்வுத்தளம்.

    BLOG போன்றது – ஆனால் வரையறுக்கப்பட்ட பதிவர்களைக் கொண்ட தளம் அல்ல.

    FORUM போன்றது – ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட வலையமைப்பு இல்லை.

    சுருக்கமாக சொன்னால் : BLOG+FORUM+WEBSITE = ASKULASKA

    யார் வேண்டுமானாலும் பதிவிடலாம், பார்வையிடலாம், வாக்களிக்கலாம் மற்றும் பகிர்ந்துக்கொள்ளலாம்.

    சுவாரசியமான ஆக்கங்கள் மற்றும் படங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பின்னூட்டமொன்றை இடுக