பஹ்ராம் பைசாய் இயக்கத்தில் 1989ல் வெளியான ஈரானியத் திரைப்படம் பாசு  தி லிட்டில் ஸ்ட்ரேஞசர்.   1999  நவம்பரில் பிக்சர் வேர்ல்ட் என்ற இரானிய பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில் BEST IRANIAN FILM OF ALL TIME என்று  திரைப்பட விமர்சகர்களாலும், திரை வல்லுனர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டது இத்திரைப்படம்.

ஒரு இளம் சிறுவனை பிரதானமாக சுற்றிப் பின்னப்பட்டதே பாசு தி லிட்டில் ஸ்ட்ரேஞசர் திரைப்படம். தெற்கு இரானின் குசெஸ்தான் பகுதியில் இரான்-ஈராக் போரின் போது குண்டு மழை பொழிகிறது, அதில் சிக்குண்டு ஒரு குடும்பம் அழிவதில் தொடங்குகிறது படம்.  தாக்குதலில் தப்பித்து சிறுவன் பாசு ஒரு ராணுவ வண்டியில் ஏறி வடக்கு இரானுக்கு செல்ல நேரிடுகிறது. பாசு அரபிக் மொழி பேசுபவன், ஆனால் கிலாக்கி பேசும் நாயி என்ற ஒரு பெண்மணியின் வயல்வெளியில் தஞ்சமடைகிறான் சிறுவன். பாசுவின் கருமை நிறமும் அவனின் மொழியும் புரியாத நிலையில் நாயி அவளின் 2 குழந்தைகளோடு சேர்த்து பாசுவையும் தன் குழந்தையாய் கிராமத்தினர் மற்றும் உறவினர்களின் எதிர்ப்புகளை மீறி வளர்க்கிறாள். பாசு, நாயியின் அன்றாட வேலையை பகிர்ந்து கொள்கிறான், அவளுக்கு உடல் நலக குறைவு வரும்போது குழந்தைகளையும், தன் தாயாக நினைக்கும் நாயியையும் கவனித்துக் கொள்கிறான். வெளி யூருக்கு வேலை தேடி சென்ற நாயியின் கணவன் வீடு வந்து சேரும் போது, அவர்களின் மோசமான பொருளாதர நிலைமையில் பாசுவை வீட்டில் சேர்த்து வைத்திருப்பதை கண்டு கடிந்து கொள்கிறான், ஆனால் அவன் மனைவியின் தாயுள்ளத்திற்கு தலை சாய்கிறான்.

மிகவும் எளிமையாக, குழந்தைகள் கதை போல தோன்றும் இத்திரைப்படம் முழுக்க முழுக்க தாய்மையையும், ஒரு தாயின் பரிவையும் மையமாகக் கொண்டு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்தினர் அடிக்கடி வந்து நாய்யிடம் பாசுவைப் பற்றி அவதூறு பேசுவதும், அவனை துரத்தும்படி அறிவுறுத்தும் போதும் வெகுண்டு பேசும் காட்சி, வயல்வெளியில் காட்டுப் பன்றி மற்றும் பறவைகளைத் கத்தித் துரத்தும் காட்சிகள், பாசு உடல்நலக் குறைவால் அவதிப்படும் போது தாயற்ற ஒரு குழந்தையை காப்பாற்றும்படி  மருத்துவரிடம் கதறும் காட்சி என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ஒவ்வொரு காட்சியையும்.  நாயி பாத்திரத்தில் வரும் (கரீனா கபூரை ஞாபகப் படுத்தும்) நடிகையின் நடிப்பு அற்புதம்.

முழுப் படத்தையும் YOUTUBEல் ஆன்லைனில் பார்த்து மகிழ,

 

 

 

 

 

 

 

 

பின்னூட்டங்கள்
 1. சாக்பீஸ் சொல்கிறார்:

  திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் சர்ச்சைகளைப் பற்றியே எழுதி வரும் பல வலைப்பதிவுகளுக்கிடையே அருமையான உலகத்திரைப்படங்களை அறிமுகப்படுத்தி வரும் தங்களது முயற்சி பாராட்டிற்குரியது. தொடர்ந்து நல்ல படங்களை அறிமுகப்படுத்துங்கள். குறைவான எண்ணிக்கை என்றாலும் பரவாயில்லை இது போன்ற தரமான படங்களை அறிமுகப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.

 2. ashok சொல்கிறார்:

  தொடர்ந்து நல்ல படங்களை அறிமுகப்படுத்துங்கள். குறைவான எண்ணிக்கை என்றாலும் பரவாயில்லை இது போன்ற தரமான படங்களை அறிமுகப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.

  • swami சொல்கிறார்:

   ரொம்ப அருமையான படம். மனிதாபிமானத்தை இதுக்கு மேல சொல்ல முடியாது. நல்ல படத்தை அறிமுகபடுத்தின உங்களுக்கு என் மனமார்ந்த
   நன்றிகள். வாழ்க வளமுடன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s