august_osage_county

வெப்பமயமானஆகஸ்ட் மாதத்தையும் ஓசேஜ் கவுன்டி என்ற  இடத்தையும் குறிப்பிடுவதாக அமையும் இப்படம் முதலில் நாடகமாக அரங்கேறி பின்னர் திரைப்பட வடிவில் ஜார்ஜ் க்லூனி மற்றும் சிலரது தயாரிப்பில்,  மெரில் ஸ்ட்ரீப், ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பிலும் உருவாகியுள்ளது.

படத்தின் கதை பெவெர்லி வெஸ்டன் என்ற எழுத்தாளன், ஜோஹனா என்ற செவ்விந்தியப் பெண்மணியை சமைப்பதற்க்கும் வீட்டை கவனிக்கும் பொருட்டு அவளை வேலைக்கு அமர்த்துவதற்கான ஒரு நேர்காணலில் தொடங்குகிறது.

போதைக்கு அடிமையாகி, வாய்ப்புற்று நோயினால்  பாதிக்கப்பட்டு விரக்தியின் உச்சத்தில் இருக்கும் வயலெட் என்ற கதாபாத்திரத்தை சுற்றி கதை நகர்கிறது. பெவெர்லி வெஸ்டன் காணமல் போக, கதாநாயகியான  வயலெட் அவளது தங்கையையும், மகள்களையும் துணைக்கு அழைக்கிறாள். 5 நாட்களுக்கு பின் பெவெர்லி ஒரு ஏரியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறார், அவரின் இறுதிச் சடங்கு மற்றும் அதைத் தொடர்ந்து நிகழும் சில சம்பவங்களுமே படத்தின் கதை.

படத்தில் இறுதிச் சடங்கை தொடர்ந்து வரும் இரவு நேர விருந்தில் வயலெட்டாக வரும் மெரில் குடும்பத்தார் ஒவ்வொருவரையும் வறுத்தெடுக்கும் காட்சி அற்புதம்,  மெரில் தன்னுடைய ஒட்டுமொத்த அனுபவத்தையும் கொட்டி நடித்து இருக்கிறார்.

Meryl-Streep

3 முறை ஆஸ்கார் விருது பெற்றவரும் 18 முறை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டவரான    மெரில் ஸ்ட்ரீப், படம் முழுக்க போதையில் வாழ்கையை வெறுத்த நிலையில் அசத்தி இருக்கிறார். மெரிலின் நடிப்பிற்கு முன் ஜூலியா ராபர்ட்ஸ் உட்பட  மற்ற கதாபாத்திரங்கள் காணமல் போகின்றன

இப்படம் ரசிக்கப்படும் வகையில் இருக்கிறது என்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் அது முழுக்க முழுக்க  நீங்கள் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் நடிப்பில் லயித்ததே காரணாமாக இருக்கும்.

இப்படத்தில் வரும் மெரில் ஸ்ட்ரிப் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் பரிந்துரையில் உள்ளார். மெரில் உண்மையில் மற்ற போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. என் அபிப்ராயத்தில் ப்ளூ ஜாஸ்மின் படத்தில் நடித்த கேட் ப்லேங்கட்டுக்கும் மெரிலுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும்.

Julia-Roberts

மெரில் ஸ்ட்ரிப்பின் முதல் பெண்ணாக வரும் ஜூலியா  ராபர்ட்சின் முந்தைய  படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும் அவரின் நடிப்பாற்றால், ஆனாலும்  மெரிலின் நடிப்பிற்கு முன் இவர் காணாமல் போய் விடுகிறார். இப்படம் மூலம்  இவர் சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார்.  இந்த பரிந்துரையும் சேர்த்து இவருக்கு இது 4வது பரிந்துரை. எரின் பரூக்விச் படத்திற்காக இவர் ஆஸ்காரின் சிறந்த நடிகை விருதை வாங்கி இருக்கிறார்.

ஜூலியா ராபர்ட்சை பொறுத்தவரையில் 12 ஈயர்ஸ் ஆப் ஸ்லேவ் படத்தில் நடித்த லூபிடா கடுமையான போட்டியைக் கொடுப்பார் மேலும் அமெரிக்கன் ஹஸ்ஸல் படத்தின் மீது ஒட்டு மொத்த ஈர்ப்பும் இருப்பதாக அறியப்படுவதால் அதில் நடித்த ஜெனிபர் லாரன்ஸயும் அலட்சியப் படுத்துவதிற்க்கில்லை.

பின்னூட்டங்கள்
  1. padaipali சொல்கிறார்:

    படிக்கும் போதே பார்க்க வேண்டும்போல் உள்ளது..அருமை..

  2. உங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-7.html) சென்று பார்க்கவும்… நன்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s