பிப்ரவரி, 2014 க்கான தொகுப்பு

august_osage_county

வெப்பமயமானஆகஸ்ட் மாதத்தையும் ஓசேஜ் கவுன்டி என்ற  இடத்தையும் குறிப்பிடுவதாக அமையும் இப்படம் முதலில் நாடகமாக அரங்கேறி பின்னர் திரைப்பட வடிவில் ஜார்ஜ் க்லூனி மற்றும் சிலரது தயாரிப்பில்,  மெரில் ஸ்ட்ரீப், ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பிலும் உருவாகியுள்ளது.

படத்தின் கதை பெவெர்லி வெஸ்டன் என்ற எழுத்தாளன், ஜோஹனா என்ற செவ்விந்தியப் பெண்மணியை சமைப்பதற்க்கும் வீட்டை கவனிக்கும் பொருட்டு அவளை வேலைக்கு அமர்த்துவதற்கான ஒரு நேர்காணலில் தொடங்குகிறது.

போதைக்கு அடிமையாகி, வாய்ப்புற்று நோயினால்  பாதிக்கப்பட்டு விரக்தியின் உச்சத்தில் இருக்கும் வயலெட் என்ற கதாபாத்திரத்தை சுற்றி கதை நகர்கிறது. பெவெர்லி வெஸ்டன் காணமல் போக, கதாநாயகியான  வயலெட் அவளது தங்கையையும், மகள்களையும் துணைக்கு அழைக்கிறாள். 5 நாட்களுக்கு பின் பெவெர்லி ஒரு ஏரியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறார், அவரின் இறுதிச் சடங்கு மற்றும் அதைத் தொடர்ந்து நிகழும் சில சம்பவங்களுமே படத்தின் கதை.

படத்தில் இறுதிச் சடங்கை தொடர்ந்து வரும் இரவு நேர விருந்தில் வயலெட்டாக வரும் மெரில் குடும்பத்தார் ஒவ்வொருவரையும் வறுத்தெடுக்கும் காட்சி அற்புதம்,  மெரில் தன்னுடைய ஒட்டுமொத்த அனுபவத்தையும் கொட்டி நடித்து இருக்கிறார்.

Meryl-Streep

3 முறை ஆஸ்கார் விருது பெற்றவரும் 18 முறை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டவரான    மெரில் ஸ்ட்ரீப், படம் முழுக்க போதையில் வாழ்கையை வெறுத்த நிலையில் அசத்தி இருக்கிறார். மெரிலின் நடிப்பிற்கு முன் ஜூலியா ராபர்ட்ஸ் உட்பட  மற்ற கதாபாத்திரங்கள் காணமல் போகின்றன

இப்படம் ரசிக்கப்படும் வகையில் இருக்கிறது என்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் அது முழுக்க முழுக்க  நீங்கள் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் நடிப்பில் லயித்ததே காரணாமாக இருக்கும்.

இப்படத்தில் வரும் மெரில் ஸ்ட்ரிப் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் பரிந்துரையில் உள்ளார். மெரில் உண்மையில் மற்ற போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. என் அபிப்ராயத்தில் ப்ளூ ஜாஸ்மின் படத்தில் நடித்த கேட் ப்லேங்கட்டுக்கும் மெரிலுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும்.

Julia-Roberts

மெரில் ஸ்ட்ரிப்பின் முதல் பெண்ணாக வரும் ஜூலியா  ராபர்ட்சின் முந்தைய  படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும் அவரின் நடிப்பாற்றால், ஆனாலும்  மெரிலின் நடிப்பிற்கு முன் இவர் காணாமல் போய் விடுகிறார். இப்படம் மூலம்  இவர் சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார்.  இந்த பரிந்துரையும் சேர்த்து இவருக்கு இது 4வது பரிந்துரை. எரின் பரூக்விச் படத்திற்காக இவர் ஆஸ்காரின் சிறந்த நடிகை விருதை வாங்கி இருக்கிறார்.

ஜூலியா ராபர்ட்சை பொறுத்தவரையில் 12 ஈயர்ஸ் ஆப் ஸ்லேவ் படத்தில் நடித்த லூபிடா கடுமையான போட்டியைக் கொடுப்பார் மேலும் அமெரிக்கன் ஹஸ்ஸல் படத்தின் மீது ஒட்டு மொத்த ஈர்ப்பும் இருப்பதாக அறியப்படுவதால் அதில் நடித்த ஜெனிபர் லாரன்ஸயும் அலட்சியப் படுத்துவதிற்க்கில்லை.

Advertisements

OSCAR 2014 – அமெரிக்கன் ஹஸ்ஷல் ( AMERICAN HUSTLE )

Posted: பிப்ரவரி 5, 2014 in ஆஸ்கார் 2014
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

AMERICAN-HUSTLE

10 விருதுகளுக்கு பரிந்துரையில் உள்ள அமெரிக்கன் ஹஸ்ஷல் மிகுந்த எதிர்பார்ப்பில் ஆஸ்காரை எதிர் நோக்கியிருக்கும் திரைப்படம், 1970களின் இறுதியில் அமெரிக்காவில் நிகழ்ந்த FBIன் ABSCAM என்று வர்ணிக்கப்படும் ஒரு நிகழ்வை அடிப்படையாக கொண்டு பின்னப்பட்ட ஒரு கற்பனைக் கதை. பேட்மேன் படங்களில் நடித்த க்ரிஸ்டியன் பேல் இந்த படத்தில் கதா நாயகனாகவும் ப்ராட்லி கூப்பர் துணைக் கதாநாயகன் வேடத்திலும், ஆமி ஆதம்ஸ் கதாநாயகியாகவும், ஜெனிபர் லாரன்ஸ் துணைக் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த 4 பேர்களும் ஆஸ்கார் பரிந்துரைகளில் தத்தம் பிரிவுகளில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

இர்விங் மோசடிகளில் ஈடுபடும் ஒரு ஏமாற்றுப் பேர்வழி, அவனுடைய மோசடி வேலைக்கு துணையாக சிட்னி என்ற பெண்ணும் இருக்க, ரிச்சர்ட் என்ற FBI உளவாளியிடம் ஒரு முறை இவர்கள் சிக்க நேரிடுகிறது. குற்றத்தில் இருந்து தப்பிக்க ரிச்சர்டுக்கு மேலும் சில குற்றவாளிகளை பிடிப்பதில் உதவி புரிவதான உத்திரவாதம் கொடுக்கின்றனர், இந்த ஒப்பந்தத்தில் சிட்னிக்கு விருப்பம் இல்லாத போதும் இர்விங்குக்கு உதவும் பொருட்டு ரிச்சர்டிடம் நெருக்கமாய் பழுகுகிறாள். அரப் சேக் ஒருவரை முதலீட்டாளர் என்று நகரின் மேயர் ஒருவரை நம்பவைத்து அவர் மூலம் சில அரசியல்வாதிகளையும், நிழல் உலக குற்றவாளிகளையும் பிடிக்க தன் வலையில் வீழ்த்துகிறான் இர்விங். கதையின் போக்கில் இர்விங்கின் மனைவி நிழல் உலகை சார்ந்த ஒருவரிடம் நெருக்கமாகி இர்விங்கின் FBI தொடர்பு பற்றி பேச, ஆனால் தனது சாதூர்யத்தால் அவர்களிடம் இருந்து தப்பி, முடிவில் பணப் பரிமாற்றங்களை வீடியோவில் பதிவு செய்வதற்காக 2  மில்லியன் டாலர்களை FBIயிடம் இருந்து இர்விங் ரிச்சர்ட் மூலம் பெற்று, அது எப்படி FBIயிடம் இருந்து களவாடப்படுகிறது என்பது தான் கதை.

பெருத்த எதிர்பார்ப்பில் இருக்கும் அமெரிக்கன் ஹஸ்ஷல் திரைப்படம் குற்றம், நகைச்சுவை, நாடகம் என்ற வகைகளின் மூலம் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றிக்கு படத்தின் கதாபாத்திர தேர்வு மிக முக்கியப் பங்கு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. முக்கியப் பாத்திரங்களில் வருபவர்கள் யாவரும் தம் பணியை செவ்வனே செய்து  இருக்கிறார்கள்.

CHRISTIAN-BALE

க்ரிஸ்டியன் பேலை முதலில் அணுகும போது அவர் நேரமின்மை காரணமாக இப்படத்தை தவிர்த்திருக்கிறார் அதனால் கதா நாயகனாக ப்ராட்லி கூப்பரை முடிவு செய்திருந்தனர் ஆனால் பின்னர் பேல் தானே கதாநாயகனாக நடிக்கிறேன் என்று இப்படத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடித்தார். பேல் இப்படத்திற்காக 40 பவுண்டு எடையைக் கூட்டி இருக்கிறார், ஆனால் இது இவருக்கு முதல் முறை இல்லை, இது போல இவர் நடித்த மெசினிஸ்ட்(2004) படத்திற்காக 63 பவுண்டுகளையும், ரெஸ்க்யூ டான்(2006) படத்திற்காக 55 பவுண்டுகளையும், தி பைட்டர்(2010) படத்திற்காக  30 பவுண்டுகளையும் குறைத்து இருக்கிறார்.

க்ரிஸ்டியன் பேல் ஏற்கனவே இதே இயக்குனரின் படமான தி பைட்டர்(2010) படத்திற்காக சிறந்த துணைக் கதாநாயகன் விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, இப்படம் இவருக்கு இரண்டாவது பரிந்துரை, படப்பிடிப்பின் போது கதையில் நிழல் உலக மாபியாவாக வரும் ராபர்ட் டீ நீரோ, க்ரிஸ்டியன் பேல் யாரென்று தெரியாமல் இயக்குனரிடம் கேட்க்கும் அளவிற்கு பேல் அந்த கதாபாத்திரத்திற்காக உடல் எடையை கூட்டி கதாபாத்திரமாகவே மாறி இருந்தார்.

AMY-ADAMS

கதாநாயகியான ஆமி ஆதம்சுக்கு இது ஆஸ்காரில் 5வது பரிந்துரை, இதுவரை இவருக்கு விருது கிடைக்கவில்லை இம்முறை இவருக்கு அதிர்ஷ்டம் இருக்குமா என தெரியவில்லை, காரணம் இவருக்கு பலத்த போட்டியாக மெரில் ஸ்ட்ரிப்பும், கேட் ப்லன்கட்டும் இருப்பதே

COOPER

துணைக் கதாநாயகன் வேடத்தில் தோன்றும் ப்ராட்லி கூப்பருக்கு இது 2வது பரிந்துரை, இதே இயக்குனரின் சில்வர் லைனிங் ப்லே புக் படம் மூலம் முன்பு  சிறந்த கதாநாயகனுக்காண பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

JENNIFER-LAWRENCE

இப்படத்தின் மூலம் ஆஸ்காரில் சிறந்த துணைக்கதாநாயகியாக பரிந்துரைக்கப்பட்ட ஜெனிபர் லாரன்ஸ் ஏற்கனவே இதே இயக்குனரின் படமான சில்வர் லைனிங் ப்லே புக் படம் மூலம் சிறந்த கதாநாயகி விருது வென்றவர். இது இவருக்கு மூன்றாவது பரிந்துரை

RUSSEL

இப்படத்தின் இயக்குனர் டேவிட் ரசல் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் இயக்கிய படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் யாவற்றிற்கும் ஆஸ்கார் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அவருக்கும் சிறந்த இயக்குனராக 3வது முறையாக அவருடைய கடைசி 3 படங்களுக்காக  பரிந்துரையை பெற்று இருக்கிறார் {சில்வர் லைனிங் ப்லே புக்(2011), தி பைட்டர்(2013) மற்றும் அமெரிக்கன் ஹஸ்ஷல்(2014)}.  மேலும் இவர் தழுவி எழுதிய திரைக்கதை பிரிவிற்கு  சில்வர் லைனிங் ப்லே புக்(2011) படம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டும் இருக்கிறார். அமெரிக்கன் ஹஸ்ஷல் படம் மூலம் முதல் முறையாக சிறந்த திரைக்கதை (original screenplay) பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார்

2010ல் அமெரிக்கன் புல்ஷிட் என்ற இத்திரைக்கதை வெளிவராத நல்ல திரைக்கதையாக 8வது இடத்தில் ஹாலிவுட் ப்ளாக் லிஸ்டில் இருந்தது, இப்படத்தின் பல காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் இம்ப்ரவைஸ் சைய்யப்பட்டிருக்கிறது.

இது தவிர சிறந்த படம் (Best Picture), ஆடை வடிவமைப்பு (Costume design), படத்தொகுப்பு (Editing), திரைக்கதை (original screenplay), கலையமைப்பு (Production Design) என்ற பிரிவுகளிலும் இப்படம் ஆஸ்காருக்காக  பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

BlueJasmine

மூன்று பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ப்ளூ ஜாஸ்மின் ஹாலிவுட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான உட்டி ஆலனால் எழுதி இயக்கப்பட்டது. இப்படம், பணக்கார உயர் குடியில் வாழ்ந்து வறுமையின் பிடியில் தள்ளப்பட்டு இருக்க இருப்பிடம் கூட இல்லாத நிலையில் தனது சகோதரியின் தயவில் வாழும் நிலைக்கு உள்ளான ஒரு பெண்மணியின் கதை. விரக்தியடைந்து ஒரு வித மனச் சிதைவுக்கு ஆளான ஜாஸ்மின் பாத்திரத்தில் கேட் ப்லேங்கட்  (Cate Blanchett) அசத்தி இருக்கிறார். உயர்குடியில் வாழும் நிலையில் பணக்கார செருக்குடன் அவர் தனது சகோதரியையும் அவரது கணவரையும் உதாசீனப்படுத்தி வரும் காட்சிகளிலும், வறுமையில் அதே சகோதரியின் தயவை நம்பி வரும் காட்சிகளிலும் தனது இயலாமையினை என்னி வருந்தும் காட்சிகளிலும், தனக்கு தானே பேசிக் கொள்ளும் மனச் சிதைவடைந்த நிலையில் இருக்கும் காட்சிகளிலும் அவருடைய இயல்பான நடிப்பு படத்திற்கு பெரும்பலம் கூட்டுகிறது. கேட் ப்லேங்கட்டின் தங்கையாக வரும் சேலி ஹாக்கின்ஸ் தன் வாழ்கை திசை மாற காரணமாக இருந்தது தன் சகோதரி தான் என்றாலும் அவள் பால் கொண்ட அன்பினால், அவளை அரவணைக்கும் காட்சிகளிலும், சகோதரி செல்வச் செருக்கினால் தன்னை உதாசீனப்படுத்துவது கூட அறியாத அப்பாவியாக வரும் காட்சிகளிலும் அவரின் நடிப்பு அருமை. கதாநாயகியை மையப்படுத்தியே கதை நகர்ந்தாலும் கதையின் போக்கை நாம் முன்கூட்டியே உணர முடிந்தாலும் ஜாஸ்மின் கதாபாத்திரத்தின் நேர்த்தி படத்திற்கு வெற்றி

woody-allen

இப் படத்தில் சிறந்த திரைக்கதைக்கான (Best Original Screenplay)  பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உட்டி அலன் ( Woody Allen) நான்கு முறை ஆஸ்கார் விருது வாங்கியவர், அதில் மூன்று முறை சிறந்த திரைக்கதை (Best Original Screenplay)  பிரிவிலும், ஒருமுறை சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றிருக்கிறார். இவர் 16  முறை திரைக்கதைக்காகவும் 7 முறை இயக்குனருக்காகவும் 1 முறை நடிகருக்காகவும் ஆக இதுவரை 24  முறை ஆஸ்கரின் விருதுப் பரிந்துறையில்  இடம் பெற்றவர். இதில் திரைக்கதைக்கான பிரிவில் 16  முறை பரிந்துரை செய்யப்பட்டிருப்பது ஒரு சாதனை. 7 முறை இயக்குனருக்காக, இதுவரை 3 பேர் பரிந்துறைக்கப்பட்டிருக்கிறார்கள் அதில் இவரும் ஒருவர். 76 வயதில் இவர் மிட்நைட் இன் பாரிஸ் என்ற படத்திற்காக 2011ல் வாங்கிய திரைக்கதைக்கான விருது அதிக வயதில் இப்பிரிவில் விருது வாங்கியவர் என்ற பெருமையை இவருக்கு கொடுத்திருக்கிறது.

Film Cate Blanchett

2004ல் ஏவியேட்டர் படத்தின் மூலம் சிறந்த துணை நடிகைக்கான (Best Supporting Actress) பிரிவில் விருது பெற்ற கேட் ப்லேங்கட் இந்த படத்தில் சிறந்த நடிகைக்கான பரிந்துறையில் உள்ளார். கோல்டன் க்லோப் விருதில் ஏற்கனவே இப்படத்தின் மூலம்  சிறந்த நடிகைக்காண விருதை தட்டி சென்ற இவருக்கு  ஆகஸ்ட்: ஆரஞ்சு கவுன்டி படத்தில் நடித்த மெரில் ஸ்ட்ரிப்  கடுமையான போட்டியைக் கொடுப்பார் என்பதில் ஐயமில்லை.

sally hawkins

முதல் முறையாக சிறந்த துணை நடிகைக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருகிறார் படத்தில் கேட் ப்லேங்கட்டுக்கு தங்கையாக வரும் சேலி ஹாக்கின்ஸ் (Sally Hawkins). 12 ஈயர்ஸ் ஆப் ஸ்லேவ் படத்தில் நடித்த லூபிடா மற்றும் ஆகஸ்ட்: ஆரஞ்சு கவுன்டி படத்தில் நடித்த ஜூலியா ராபர்ட்சும் இவருக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள் அதையும் மீறி இவருக்கு இவ்விருது கிடைக்குமா ?என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.