Archive for the ‘இயற்பியல் தகவல்’ Category

இயற்பியலில், மின் பொறியியல் இன்று தவிர்க்க முடியாத, அன்றாடம் உபயோகபடுகின்ற ஒரு துறையாகும், இன்று கணினி சம்பந்தப்பட்ட ஒரு தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட மவுஸ் (சுட்டி) எப்படி இருந்தது தெரியுமா? இதை கண்டறிந்தவர்  யார் தெரியுமா? 

மேற்கண்ட  படத்தில் இருப்பது தான் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட மவுஸ் (சுட்டி), இதை கண்டறிந்தவர் டக்லஸ் எங்கல்பர்ட். 1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அமெரிக்காவில் ஒரிகன் என்ற இடத்தில பிறந்தவர் எங்கல்பர்ட். கணினியில் உள்ளீட்டுச் சாதனமான மவுஸ் எனப்படும் சுட்டுபொறி, காட்சித் திரைகளுக்கான X Y  நிலைகாட்டி என்பது இதின் தொடக்க  காலப் பெயர். இது பாற்பதற்கு எலி போன்ற தோற்றம் கொண்டிருந்ததால்  மவுஸ் என அழைக்கப்பட்டது.

இணையத்தின் முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படும் எங்கல்பர்ட் இனைய தளங்களில் பயன்படுகின்ற ஹைபர் டெ க்ஸ்ட் தொழில் நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்தவர். இவர் மின் பொறியியல் பயின்றவர் அதே துறையில் ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்று துணை பேராசிரியாராக முதலில் பணியில் சேர்ந்தார், பின்னர் ஸ்டான்போர்ட் ஆய்வு மையத்திலும் அதன் பின்னர் தானே  சொந்தமாக ஒரு ஆய்வு மையத்தை தொடங்கி ஆய்வுகளை மேற்கொண்டார் 85 வயதை கடந்து இன்றும் கணினி சம்பதப்பட்ட ஆய்வுகளில் தன்னை  ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.

 
 கடல் நீர் ஏன் நீல நிறமாய் இருக்கிறது… இந்த கேள்விக்கு கிடைத்தது தான் ஒரு நோபெல் பரிசு, கேள்வியை கேட்டது யார்? பதில் கிடைத்தது யாரிடத்தில்? யார் அந்த விஞ்ஞானி? நமது தமிழகத்திலே, திருச்சியிலே பிறந்து சென்னையில் படித்து உலகபுகழ் பெற்ற சர் CV ராமன் தான் அந்த விஞ்ஞானி.  உண்மையில்  கடல் நீர் வானத்தின் பிரதிபலிப்பு  என்பது பலருக்கு தெரியும். அதாவது ஒளிச்சிதறல். ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது;  சரி இது ஒரு சாதாரண நிகழ்வு தானே, இதனால் என்ன பயன்? இருக்கே… 
 • பெட்ரோலியவேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணிக்க
 • போதை மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே மருந்துகளை இனம் காண,
 • வண்ணப்பூச்சுகள் இருகும்போது எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதை அறிய,
 • அணுக்கருக் கழிவுகளை தொலைவிலிருந்தே ஆய்வு செய்ய…
 • இப்படி பல பயன்கள் இருக்கின்றன. 

  சந்திரசேகர வெங்கட ராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில்,தமிழ்நாட்டில், திருச்சியில் பிறந்தார். இராமன் அவர்கள் சென்னையில் உள்ள பிரெசிடென்சி கல்லூரியில் 1904ல்  இளங்கலை ( B A ) பட்டம் பெற்றார். பின்னர் 1907ல் இவர் முதுகலை பட்டமும் பெற்றார். முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

  சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில்  உள்ள அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில், ஒளிச்சிதறல் பற்றி செய்முறை ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தா பல்கலைகழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்து அங்கு 15 ஆண்டுகள் கழித்த பிறகு,பெங்களூரூவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின் அவர் நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றினார்.

 • இவருக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
 • பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் “நைட் ஹீட்” எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
 • 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது.
 • 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
 • இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான “மேட்யூச்சி” பதக்கம் வழங்கப்பட்டது.
 • மைசூர் அரசர் “ராஜ்சபாபூசன்” பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார்.
 • பிலிடெல்பியா நிறுவனத்தின் “பிராங்க்ளின்” பதக்கம் 1941 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
 • இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.
 • 1957 ஆம் ஆண்டில் அகில “உலக லெனின் பரிசு” அளிக்கப்பட்டது.
 • நன்றி: விக்கிபீடியா

  ஒரு மணிக்கு 25 ஆயிரம் மைல் வேகம், என்ன விந்தையாக இருக்கிறதா, இது கண்டிப்பாக இரு சக்கர 
  வண்டிக்கோ, மகிழுந்துக்கோ, விமானத்துக்கோ இல்லை. விண்வெளிக்கு போகும் ராக்கெட்  திரும்பி பூமிக்கே வராமலிருக்க தேவையான வேகம் தான் இது. நண்பர் மேலிருப்பான்  சமிபத்தில் அவர் எழுதிய மறுமொழியில் இயற்பியல் சம்பந்தப்பட்ட இடுகைகளை அளிக்குமாறு கேட்டு கொண்டிருந்தார் அவரின் விருப்பத்திற்கேற்ப  சில இயற்பியல் சம்பந்தப்பட்ட விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன். இந்த இடுகை ராக்கெட் புவியின் ஈர்ப்பு விசையை தாண்டி மேலே போவதை பற்றிய தகவல்.
   
  இந்த அண்டத்தில் எல்லா பொருள்களுக்கும் ஒரு ஈர்ப்பு விசை இருக்கிறது, பூமியில் இருக்கும் விசை புவியீர்ப்பு விசை, அது தான் பொருள்களை சமநிலையில் வைத்திருக்க  உதவுகிறது என்பது நமக்கு எல்லாம் தெரியும். நியூட்டன் ஆப்பிள் பழத்தை மேலே எரிந்து கீழே திரும்பி வருவதை கொண்டு புவியீர்ப்பு விசையை குறித்து தனது ஆராய்சியை மேற்கொண்டார் என நமக்கு தெரியும், ஆனால் ஆப்பிள் ஈர்ப்பு விசையை மீறி எப்படி மேலே போகும், அப்படி போகவேண்டுமானால் அதற்கு எவ்வளவு சக்தி தேவை, எவ்வளவு வேகம் தேவை. இதையெல்லாம் ஆராயும் போது தான் விடுபடு திசைவேகம் என்ற ஒரு விஷயம் கண்டறியப்பட்டது. விடுபடு திசைவேகம்(escape velocity) எனப்படுவது ஒரு பொருளானது கோளின் ஈர்ப்பு  விசையினின்றும் விடுபட்டுச் செல்வதற்குக் கோளின் பரப்பில் அப்பொருளுக்கு அளிக்கப்படவேண்டிய மேல் நோக்கிய சிறுமத் திசைவேகம் ஆகும். 
  ஒரு செகண்டுக்கு 11 கிலோமீட்டர் முதல் 11.3 கிலோமீட்டர் வேகத்தில் ராக்கெட் மேல்நோக்கி போனால் அது புவியை விட்டு விடுபடும் அதாவது கிழே விழாமல் புவியை தாண்டி செல்லும்.  இது சுமாராக ஒரு மணிக்கு 25 ஆயிரம் மைல் வேகம். அடேங்கப்பா செம ஸ்பீட் இல்லை…