Posts Tagged ‘பழமைவாதி’

the-croods

ஆஸ்கரில் உயிரோவிய(Animation) பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முப்பரிமான உயிரோவிய திரைப்படமான தி க்ரூட்ஸ், புகழ்பெற்ற ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 20த் சென்சுரி பாக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

கற்க்காலத்தில் தொடங்குகிறது கதை, ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம், குடும்பத்தலைவன் க்ரக் ஒரு பழமைவாதி, புதிய சிந்தனை என்பதே தவறு, புது சிந்தனைகள் என்பது இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் என்பது அவன் கருத்து. பிரச்சினை வரும் போதெல்லாம் குகைக்குள் சென்று நாட்கணக்கில் பதுங்கியிருப்பதுதான் அவன் வாடிக்கை. அவனுக்கு நேரெதிர் அவனது மகள் ஈப், அவள் ஒரு புதுமை விரும்பி, புது விசயங்களைத் தேடிச் செல்பவள். இதனால் இவர்கள் இருவருக்கிடையில் அடிக்கடி வாக்குவாதம் நடைபெறும், ஒரு நாள் குகைக்குள்  பதுங்கியிருக்கும்போது ஒரு ஒளி நகர்வதை பார்த்து குகைக்குள் இருந்து வெளியே வருகிறாள் ஈப். அப்போது தீயை முதன் முதலில் கண்டு ஆச்சர்யமடடைகிறாள், அதை உண்டாகிய கய் என்பவனிடம் நட்பு பரிமாறிக் கொள்கிறாள், அவன் மூலமாக அப்பகுதி நிலநடுக்கம் மற்றும் எரிமலையால் பாதிக்கப்படும் என்று அறிகிறாள். மேலும்  தன்னை தொடர்பு கொள்ள சங்கு போன்ற ஒரு இசைக் கருவியை கொடுத்துவிட்டும் செல்கிறான்  கய்

குகைக்குள் இருந்து தனியே வெளியே சென்றதற்காக க்ரக், ஈப்பை கடிந்து கொள்கிறார், தான் சந்தித்த நபர் பற்றியும், அவன் தீ செய்யத் தெரிந்தவன் என்பதையும், அவன் ஒரு புதுமைவிரும்பி என்றும் அவனைப் பற்றிய எல்லா விசயங்களையும் சொல்கிறாள், இந்நிலையில் அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறது குடும்பம், சங்கை முழங்க செய்து ஈப், கய்யை வரவழைகிறாள்.

அதன்பிறகு  கய், க்ரக் குடும்பத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றி, ஒரு புது இடத்திற்கு அழைத்து செல்வதே கதை. க்ரக், கய் இருவருக்குமிடையே உள்ள கருத்துவேறுபாடு நீங்கி புது முயற்சி தான் வாழ்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோகும் என்று க்ரக் உணர்வதாக முடிகிறது படம்.

க்ரக் கதாபாத்திரத்திற்கு நிக்கோலஸ் கேஜ் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். நல்ல திரைக்கதையோடு, 3D படங்களுக்கே உண்டான வண்ணமயமான காட்சி அமைப்புகளோடு, நகைச்சுவையும் கலந்த ஒரு அட்வெண்சர் படமான தி க்ரூட்ஸ் ஆஸ்கரில் உயிரோவிய(Animation) பிரிவில் நல்ல போட்டியைக் கொடுக்கும், டிஸ்னியின் ப்ரோசண் படத்திற்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு கருத்து நிலவுவதால் க்ரூட்ஸ்கு வெற்றி கிட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இப்படம் வெளியாவதற்கு முன், ட்ரீம்வொர்க்ஸ் கடுமையான நிதி பற்றாக்குறையை சந்தித்துக் கொண்டிருந்தது, பல உயிரோவியக் கலைஞர்களை பனி நீக்கம் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகி போயிருந்தது, அதிர்ஷ்டவசமாக க்ரூட்ஸ்கு கிடைத்த வரவேற்ப்பில் 583 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டி ட்ரீம்வொர்க்ஸ்சின் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவியது, மேலும் இது சென்ற ஆண்டின் 6வது மிகப் பெரிய வசூலாக அறியப்படுகிறது.

Advertisements

பழமைவாதிகள் நிறைந்த இந்தியா, பங்களாதேஷ்,பாகிஸ்தான்,துருக்கி,ஜோர்டான் மற்றும் பாலஸ்தீனிய பகுதிகளில் அதிகமாக கௌரவக்  கொலைகள் நடப்பதாக  தகவல். 5,000  பெண்கள் உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் கௌரவக்  கொலைக்கு உள்ளாகிறார்கள் என்பது ஐ.நா வின் புள்ளிவிவரம். ஆனால் இது உண்மையான கணக்காக இருக்க வாய்ப்பு இல்லை, காரணம் நிறைய கொலைகள் வெளியில் தெரியாமலே மறைக்கப்படுகின்றன. கௌரவக் கொலைகள் பெரும்பாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் மத்தியில் தான் அதிகமாக காணப்படுகிறது. காதல், திருமணத்துக்கு முன் உறவு கொள்ளுதல், கள்ளக்காதல், பெரியவர்களுக்கு கிழ்படியாமல் இருத்தல், ஏன் சில சமயங்களில் உணவு பரிமாறவில்லை என்று கொலை செய்ததாக கூட ஒரு செய்தி வந்திருக்கிறது. 

 பாகிஸ்தானில் 2009 இல் மட்டும் 647 பெண்கள் கௌரவ கொலைக்கு உள்ளாகி   இருக்கிறார்கள். இது முந்தைய வருடத்தை பார்க்கும் போது 13 விழுக்காடு அதிகமாம். 2008ல் துருக்கியில் மனித உரிமைக் கழகத்தின் கூற்றுப்படி வாரத்திற்கு ஒரு கௌரவக்  கொலை நடைபெறுகிறது என்று புள்ளிவிவரம் சொல்கிறது. கடந்த 5 வருடத்தில் 1000 கொலைகள் நடந்தேறி இருக்கிறது. காசாவில் வாரத்திற்கு 3 அல்லது 4 நபர்கள் கௌரவக்  கொலை செய்யப்படுகிறார்கள், கௌரவக்  கொலைகள் வெறும் ஆசியாவில் மற்றும் நடக்கிறது என்று சொல்லிவிட முடியாது வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகளிலும் இந்த பிரச்சனை உள்ளதாகவும் தெரிவிகின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.

குடும்பங்கள் என்ற அமைப்பு அழிந்து கொண்டிருகிறது என்று பலர் கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் குடும்ப கௌரவத்தை பாதுகாக்க கௌரவக்  கொலைகள் பல உலகெங்கும்  நடந்தேறி கொண்டிருப்பது குடும்பங்கள் மீதுள்ள நம்பிக்கை மக்களிடம் அழிந்து போகவில்லை என்பது ஆறுதலான விசயமானாலும் தனிநபர் உரிமை மறுக்கப்படும் போது அப்படிப்பட்ட குடும்பங்கள் இருந்து என்ன பயன் என்ற கேள்வியும் எழுகிறது. மனிதன் ஒரு சமூக பிராணி அவனுக்கு சமூகத்தில் அந்தஸ்து என்பது வாழ்வின் மூலாதாரம் அதற்கு பங்கம் வரும் நிலை வரும் போது கொலை செய்யும் அளவிற்கும் போகிறான் உறவுகளை கூட எண்ணி பார்பதில்லை. புள்ளிவிவரங்களை பார்க்கும்போது இது வெறும் ஒரு குறிபிட்ட பிரிவினர் அல்லது நாட்டின் பிரச்சனை இல்லை.  இது ஒரு உளவியல் பிரச்சனை, பழமைவாதம் இதன் மூலக்கரு.