ஆஸ்கரில் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிராவிட்டி, இதுவரை வந்திருக்கும் முப்பரிமான படங்களில் தவிர்க்கமுடியாத ஒரு படம், ஆங்கிலத்தில் டெக்னிக்கல் எக்ஸ்சலன்ஸ் என்ற சொல்லுக்கு தகுதியான இந்த வருட ஹாலிவுட்டின் ப்லாக் பஸ்டர் படம். ஏற்கனவே ஆஸ்கர் படங்களில் ஆல் இஸ் லாஸ்ட் என்ற படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுத்த படத்தை பற்றி பார்த்தோம், இது அந்த வரிசையில் இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் எதிர்பாராத விதமாக விண்வெளிக் கழிவுகள் எற்படுத்தும் விபத்தினால் அவர்களின் விண்வெளி ஓடம் பழுதடைந்துவிடுகிறது. இதன் காரணமாய் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் அருகில் பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் உட்பட பாழாகின்றன. புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் படத்தின் நாயகி ரேயான் (சாந்த்ரா புல்லக்) தவிர மற்றவர்கள் அனைவரும் இறந்து விடுகின்னர். தான் வந்த விண்கலமும், பூமியைத் தொடர்பு கொள்ளத் தேவையான தொலைத்தொடர்பு சாதனங்களும் சேதமாகியிருக்க, செய்வதறியாது உயிர் வாழ வேண்டும் என்ற உந்துதலில் போராடி, ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சிக்கும் முயன்று பின்னர் கடின போராட்டத்திற்குப்பின் இறுதியில் பூமிக்குத் திரும்பி வருகிறார் கதாநாயகி
இப்படத்தை சாதாரண வடிவில் அதாவது முப்பரிமான படமாக பார்க்காவிடில் வெகு சாதாரணமாகவெ தோன்றும், ஆதலால் பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் தயவுசெய்து இப்படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பது நல்லது. கதையை ஒருவரியில் சாதாரணமாக சொல்லிவிடலாம். ஆனால், கதையின் கட்டமைப்பு, கலைவடிவம் தான் பிரமிப்பு. வானம் சுழல்வது போன்ற காட்சி, நம்மை நோக்கி ஓர் சிறிய கல் வருவதுபோல் தோன்ற, அருகே வரவர கல் ஒரு மனிதனாக மாறி காட்சியளிக்கிறது. இருக்கையின் நுனிக்கே வரவழைத்துவிடும் முதல்காட்சியின் பிரம்மாண்டம். இதுபோல படத்தில் பல காட்சிகள்.
சிறந்த திரைப்படம் ( Best Picture)
சிறந்த கதாநாயகி ( Best Actress in a Leading Role )
சிறந்த படப்பதிவு ( Best Cinematography )
சிறந்த இயக்கம் ( Best Direction )
சிறந்த படத்தொகுப்பு ( Best editing )
சிறந்த பாடல் (best original score )
சிறந்த கலை ( Best Production Design )
சிறந்த ஒலித்தொகுப்பு ( Best Sound Editing )
சிறந்த ஒலி சேர்ப்பு ( Best Sound Mixing )
சிறந்த விஸ்வல் எபக்ட்ஸ் ( Best Visual Effects ) என்ற 10 பிரிவுகளில் ஆஸ்கரில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிராவிட்டி படம் விஸ்வல் எபக்ட்ஸ், கலை போன்ற பிரிவுகளில் விருதுகளை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி சிறந்த படம், கதாநாயகி, படப்பதிவு பிரிவுகளில் கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.