Posts Tagged ‘கணினி வரைகலை’

மனோஜ் நைட் ஷ்யாமளன்  புதுவையில்(மாஹே) பிறந்தவர். எழுத்தாளர் மற்றும் இயக்குனரான இவரது தற்போதைய புது வெளியீடான தி லாஸ்ட் ஏர்பெண்டர் US பாக்ஸ்ஆபீசில் 2 வது இடத்தில் இருக்கிறது. இவருடைய  படமான தி சிக்ஸ்த் சென்ஸ் US ல் மட்டும் 300 மில்லியனும் மேலும் 360 மில்லியன் உலகமெங்கும் வருமானம் ஈட்டியது. அவருடைய எல்லாப் படங்களின் மொத்த வருமானம் இதுவரை US ல் மட்டும் 840 மில்லியனை தாண்டி இருக்கிறது. இது இந்திய வம்சாவளி இயக்குனர்கள் யாரும் செய்யாத சாதனையாகும். தி லாஸ்ட் ஏர்பெண்டர் இவருடைய 9 வது இயக்கமாகும். இவர் இதற்குமுன்
Praying with Anger (1993)
Wide Awake (1998)
The Sixth Sense (1999)
Unbreakable (2000)
Signs (2002)
The Village (2004)
Lady in the water (2006)
The happening (2008)
என்ற 8 படங்களை இயக்கி இருக்கிறார்.  
புகழ் பெற்ற ஸ்டீவர்ட்  லிட்டில் திரைப்படத்தின் திரைக்கதையும் இவர் எழுதி இருக்கிறார். தி லாஸ்ட் ஏர்பெண்டர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவதார் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இது தமிழில் உலக நாயகன் என்று மொழி மாற்றம் செய்யப்பட்டு தேனாண்டாள் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. இது முதலில் 2D ல் சாதாரண படமாக எடுக்கப்பட்டதாம். ஆனால் பின்னர் 3D யாக மாற்றம் செய்யப்பட்டு சென்ற வாரம் உலகெங்கும் வெளியிடப்பட்டது. இந்தமுறை ஷ்யாமளன் கணினி வரைகலையை வெகுவாக பயன்படுத்தி இருப்பது முன்னோட்ட காட்சிகளை பார்த்தால் உங்களுக்கே தெளிவாகும். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு பிறகு அதன் கதா நாயகன் தேவ் படேல் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். இந்த வாரம் இந்தியாவில் வெளியாக போகும் இந்த படத்தை உங்களை போல நானும் எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.