Posts Tagged ‘3D’

the-croods

ஆஸ்கரில் உயிரோவிய(Animation) பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முப்பரிமான உயிரோவிய திரைப்படமான தி க்ரூட்ஸ், புகழ்பெற்ற ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 20த் சென்சுரி பாக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

கற்க்காலத்தில் தொடங்குகிறது கதை, ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம், குடும்பத்தலைவன் க்ரக் ஒரு பழமைவாதி, புதிய சிந்தனை என்பதே தவறு, புது சிந்தனைகள் என்பது இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் என்பது அவன் கருத்து. பிரச்சினை வரும் போதெல்லாம் குகைக்குள் சென்று நாட்கணக்கில் பதுங்கியிருப்பதுதான் அவன் வாடிக்கை. அவனுக்கு நேரெதிர் அவனது மகள் ஈப், அவள் ஒரு புதுமை விரும்பி, புது விசயங்களைத் தேடிச் செல்பவள். இதனால் இவர்கள் இருவருக்கிடையில் அடிக்கடி வாக்குவாதம் நடைபெறும், ஒரு நாள் குகைக்குள்  பதுங்கியிருக்கும்போது ஒரு ஒளி நகர்வதை பார்த்து குகைக்குள் இருந்து வெளியே வருகிறாள் ஈப். அப்போது தீயை முதன் முதலில் கண்டு ஆச்சர்யமடடைகிறாள், அதை உண்டாகிய கய் என்பவனிடம் நட்பு பரிமாறிக் கொள்கிறாள், அவன் மூலமாக அப்பகுதி நிலநடுக்கம் மற்றும் எரிமலையால் பாதிக்கப்படும் என்று அறிகிறாள். மேலும்  தன்னை தொடர்பு கொள்ள சங்கு போன்ற ஒரு இசைக் கருவியை கொடுத்துவிட்டும் செல்கிறான்  கய்

குகைக்குள் இருந்து தனியே வெளியே சென்றதற்காக க்ரக், ஈப்பை கடிந்து கொள்கிறார், தான் சந்தித்த நபர் பற்றியும், அவன் தீ செய்யத் தெரிந்தவன் என்பதையும், அவன் ஒரு புதுமைவிரும்பி என்றும் அவனைப் பற்றிய எல்லா விசயங்களையும் சொல்கிறாள், இந்நிலையில் அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறது குடும்பம், சங்கை முழங்க செய்து ஈப், கய்யை வரவழைகிறாள்.

அதன்பிறகு  கய், க்ரக் குடும்பத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றி, ஒரு புது இடத்திற்கு அழைத்து செல்வதே கதை. க்ரக், கய் இருவருக்குமிடையே உள்ள கருத்துவேறுபாடு நீங்கி புது முயற்சி தான் வாழ்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோகும் என்று க்ரக் உணர்வதாக முடிகிறது படம்.

க்ரக் கதாபாத்திரத்திற்கு நிக்கோலஸ் கேஜ் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். நல்ல திரைக்கதையோடு, 3D படங்களுக்கே உண்டான வண்ணமயமான காட்சி அமைப்புகளோடு, நகைச்சுவையும் கலந்த ஒரு அட்வெண்சர் படமான தி க்ரூட்ஸ் ஆஸ்கரில் உயிரோவிய(Animation) பிரிவில் நல்ல போட்டியைக் கொடுக்கும், டிஸ்னியின் ப்ரோசண் படத்திற்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு கருத்து நிலவுவதால் க்ரூட்ஸ்கு வெற்றி கிட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இப்படம் வெளியாவதற்கு முன், ட்ரீம்வொர்க்ஸ் கடுமையான நிதி பற்றாக்குறையை சந்தித்துக் கொண்டிருந்தது, பல உயிரோவியக் கலைஞர்களை பனி நீக்கம் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகி போயிருந்தது, அதிர்ஷ்டவசமாக க்ரூட்ஸ்கு கிடைத்த வரவேற்ப்பில் 583 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டி ட்ரீம்வொர்க்ஸ்சின் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவியது, மேலும் இது சென்ற ஆண்டின் 6வது மிகப் பெரிய வசூலாக அறியப்படுகிறது.

ஐசோமெட்ரிக் அல்லது பெர்ஸ்பெக்டிவ் காட்சிக் கோணம் என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்,உதாரணத்திற்கு கூறுவோமெனில் கார் விளம்பர ஹோர்டிங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள்ஹோர்டிங்கை எங்கிருந்து பார்த்தோமானாலும் கார் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.அந்தக் காட்சிக்கோணத்தை அடிப்படையாக வைத்து முப்பரிமான முறையில் தீட்டப்பட்டதேகீழ்கண்டகண்ணுக்கு விருந்தளிக்கும்  ஓவியங்கள் யாவும்.  சமீபத்தில் சீனாவில் நடந்தஒரு ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்ற முப்பரிமான ஓவியங்கள்…

மனோஜ் நைட் ஷ்யாமளன்  புதுவையில்(மாஹே) பிறந்தவர். எழுத்தாளர் மற்றும் இயக்குனரான இவரது தற்போதைய புது வெளியீடான தி லாஸ்ட் ஏர்பெண்டர் US பாக்ஸ்ஆபீசில் 2 வது இடத்தில் இருக்கிறது. இவருடைய  படமான தி சிக்ஸ்த் சென்ஸ் US ல் மட்டும் 300 மில்லியனும் மேலும் 360 மில்லியன் உலகமெங்கும் வருமானம் ஈட்டியது. அவருடைய எல்லாப் படங்களின் மொத்த வருமானம் இதுவரை US ல் மட்டும் 840 மில்லியனை தாண்டி இருக்கிறது. இது இந்திய வம்சாவளி இயக்குனர்கள் யாரும் செய்யாத சாதனையாகும். தி லாஸ்ட் ஏர்பெண்டர் இவருடைய 9 வது இயக்கமாகும். இவர் இதற்குமுன்
Praying with Anger (1993)
Wide Awake (1998)
The Sixth Sense (1999)
Unbreakable (2000)
Signs (2002)
The Village (2004)
Lady in the water (2006)
The happening (2008)
என்ற 8 படங்களை இயக்கி இருக்கிறார்.  
புகழ் பெற்ற ஸ்டீவர்ட்  லிட்டில் திரைப்படத்தின் திரைக்கதையும் இவர் எழுதி இருக்கிறார். தி லாஸ்ட் ஏர்பெண்டர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவதார் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இது தமிழில் உலக நாயகன் என்று மொழி மாற்றம் செய்யப்பட்டு தேனாண்டாள் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. இது முதலில் 2D ல் சாதாரண படமாக எடுக்கப்பட்டதாம். ஆனால் பின்னர் 3D யாக மாற்றம் செய்யப்பட்டு சென்ற வாரம் உலகெங்கும் வெளியிடப்பட்டது. இந்தமுறை ஷ்யாமளன் கணினி வரைகலையை வெகுவாக பயன்படுத்தி இருப்பது முன்னோட்ட காட்சிகளை பார்த்தால் உங்களுக்கே தெளிவாகும். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு பிறகு அதன் கதா நாயகன் தேவ் படேல் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். இந்த வாரம் இந்தியாவில் வெளியாக போகும் இந்த படத்தை உங்களை போல நானும் எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.