Posts Tagged ‘australia’

முதல் உலகப் போரை பற்றி நாம் நிறைய படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தியாவில் இந்த போரினால் தாக்குதல் நடை பெற்றது தெரியுமா?  ஜெர்மனி இந்தியாவை தாக்கியது பற்றி கேள்விபட்டு இருக்கிறீர்களா? இந்தியாவின் எந்தப்பகுதி தாக்கப்பட்டது?  இந்த எல்லா கேள்விக்கும் பதிலை  உங்கள் வீட்டில் யாராவது பெருசுகள் இருந்தால் உடனே உரக்க சொல்லும் எம்டன் தாக்குதலை பற்றி.  

யார் இந்த எம்டன், சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த எம்டன் மகன் திரைப்படத்திற்கு பிறகு இந்தத் தலைமுறையில் சிலர் எம்டனை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள்(படத்தில் இதுபற்றி எதுவும் சொல்லவில்லை ஆனால் பெயர்க்காரணம் பற்றி கூறும்போது சில பத்திரிகைகளில் எம்டனை பற்றிய தகவல் வெளியானது). தெரியாதவர்களுக்கு இந்த இடுகை மூலம் நான் தெரியப்படுத்துகிறேன்.

எஸ்.எம்.எஸ் எம்டன்  என்பது ஜெர்மனியக்  கடற்படையின் ஒரு கப்பல். 1908ம்  ஆண்டில் போலந்து நாட்டின் “டான்ஜிக்” என்ற கப்பல் கட்டும் துறையில் ஜெர்மானியக் கப்பல் நிபுணர்களால் கட்டப்பட்ட ஒரு போர்க் கப்பல் ஆகும்.

எம்டன் அலை வீசும் கடலிலும் துரிதமாகச் செல்லக் கூடியது. இதில் முதல்தரமான பீரங்கிகள் சுமார் 20 பொருத்தப்பட்டு இருந்தன.  முதலாம் உலகப் போரின் போது 1914ல் பல நாடுகளாலும் வியந்து பார்க்குமளவுக்கு இக்கப்பலின் போரிடும் திறன் இருந்தது. 1914ன் இறுதிப் பகுதியில் எம்டன் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கத்தியக் கூட்டுப் படைகளின் 25 கப்பல்களை அழித்தோ அல்லது கைப்பற்றியோ இருக்கிறது.

1914 ஆகஸ்ட் இறுதியில் ‘எம்டன்’ சீனக் கடற்பகுதியில் தனது சாகசத்தைக் காண்பித்துவிட்டு, இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தது. அதனுடைய திடீர்த் தாக்குதல் வியப்பானது. ஆங்காங்கு தனது கொடியை இடத்திற்குத் தக்கவாறு மாற்றிக் கொண்டு அந்தந்த நாட்டுத் துறைமுகங்களில் தனக்கு வேண்டிய நிலக்கரி மற்றும் வேறு சாதனங்களைத் தந்திரமாகப் பெற்றுக்கொள்ளுமாம்.

கார்ல் வான் முல்லர் தலைமையில் 1914, செப்டம்பர் 22ம் நாள் இரவு இந்தியாவின் மதராஸ் நகரை அடைந்தது  எம்டன். சென்னை  துறைமுகப் பகுதியை அடைந்தவுடன், சிறிது நேரம் நிலைமையை கண்காணித்தப் பின்னர் சரியாக இரவு 9.30 மணிக்கு தாக்குதலை நடத்த வான் முல்லர் ஆணையிட்டார். யாரும் எதிர்பாராத நேரத்தில், சென்னை கடற்கரையில் இருந்து சில ஆயிரம் அடி தூரத்தில் நின்று கொண்டு, குண்டுகளைப் பொழிந்தது எம்டன். முதலில் பர்மா எண்ணெய்க் கம்பனிக்குச் சொந்தமான எண்ணெய்த் தாங்கிகள் மீது குண்டுகளை வீசியது. முதல் 30 சுற்றுத் தாக்குதல்களில் பல தாங்கிகள் தீப்பற்றி எரியத் தொடங்கின. அடுத்ததாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய சரக்குக்கப்பல் ஒன்றைத் தாக்கி மூழ்கடித்தது. அக்கப்பலில் இருந்த 26 மாலுமிகள் இத்தாக்குதலில் காயமடைந்தனர். 5 மாலுமிகள் உயிரிழந்தனர். இரவு 10 மணி வரை இத்தாக்குதல் நடைபெற்றது. அதன் பின்னரே ஆங்கிலேயக் கரையோரக் காவல் படையினர் பதில் தாக்குதலை ஆரம்பித்தனர். ஆனாலும், அதற்குள் வெற்றிகரமாக தனது தாக்குதலை முடித்தவுடன் எம்டன் திரும்பி விட்டது. மொத்தம் 125 குண்டுகளை “எம்டன்” அன்றையை இரவு வீசியிருந்தது. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த தாக்குதலால் அப்போதைய மெட்ராஸ் நகரமே கதிகலங்கிப்போனது.

எம்டன் மீண்டும் தாக்கும் என்ற அச்சத்தில் நகரை விட்டு பலர் வெளியேறினார்கள். இத் தாக்குதலில் பலத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் இந்தியாவில் பல ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த  வெள்ளையர்களின் கவுரவத்தை குலைப்பதாக இந்நிகழ்வு அமைந்தது. முதலாம் உலகப் போரின் போது இந்தியாவில் மதராஸ் நகரம் மட்டுமே தாக்குதலுக்கு இலக்கான நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கப்பல் கடைசியாக ஆஸ்திரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ். சிட்னி கப்பலினால் கொக்கோஸ் என்ற இடத்தில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது

சென்னையில் நடந்த எம்டன் தாக்குதலுக்கு பிறகு எம்டன் என்ற சொல் கெட்டிக்காரன் என்ற பொருளோடு, அவன் சரியான எம்டனாக இருக்கான் அதாவது வருவதும் போவதும் தெரியாமல் இருக்கான் என்று பொருள் பட கூறுவார்கள். இச்சொற்றொடர் எம்டன் கப்பல் திடீர் திடீர் என்று தோன்றி ஆங்கிலேயருக்கு போக்கு காட்டியதால் ஏற்பட்ட ஒரு வட்டார சொல் ஆகியது.

எம்டனின் தாக்குதல்கள்  பற்றிய ஒரு ஆவணப்படத்தை இந்த இடுகையின் பின் இணைப்பாக  இணைத்திருக்கிறேன்.

நன்றி: விக்கிப்பீடியா

 

 

ஏப்ரல் மாதம் வந்தாலே சம்பள உயர்வை பற்றி பேசாத ஊழியர்களே இருக்கமுடியாது… எனக்கு 30 சதவிகிதம் எனக்கு 20 என ஒவ்வொருத்தரும் மற்றவரின் வயிற்றெரிச்சலை கொட்டி கொள்வது இயல்பான விஷயம். ஆனால் இங்கே ஆகஸ்ட் மாதம் ஊதிய உயர்வு கொடுக்கிறார்கள். யாருக்கு? நமது மேன்மை தங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு. சென்ற வாரம் இந்த செய்தியை எல்லா இதழ்களும் வெளியிட்டிருக்கும் நீங்களும் படித்திருப்பீர்கள். 300 சதவிகித சம்பள உயர்வு, இப்போது ஏறக்குறைய 16,000 வாங்கி கொண்டிருந்த உருப்பினர்களுக்கு தற்போது 50,000 வழங்க தீர்மானித்து இருக்கிறார்கள், ஆனால் 80,000 வரை உயர்வை எதிர்பார்த்து இருந்தார்களாம். இது தவிர அலுவலக செலவுக்காக வழங்கப்பட்ட 20,000 , 40,000 மாக உயர்த்தப்பட்டது மேலும் வாகனங்கள் வாங்க வட்டி இல்லாத கடனாக ஒரு லட்சம் பெற இருந்தது 4 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பயணம் செய்யும் போது ஒரு கிலோமீட்டருக்கு 13 ரூபாயாக இருந்தது 16 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உறுப்பினரின் மனைவியோ அல்லது கணவரோ இலவசமாக முதல் வகுப்பில் எத்தனை தடவை வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம், முன்பு இந்த வசதி உறுப்பினருக்கு மட்டுமே இருந்தது. ஓய்வூதிய தொகை 8,000 ரூபாயாக இருந்தது 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஒரு சாதாரண மனிதரை கேட்டால் இத்தனை சலுகைகள் மிகவும் அதிகம் இவர்களுக்கு இதெல்லம் ரொம்ப ஓவர் என்றே சொல்வார்கள், உறுப்பினர்களுக்கும் இந்த சலுகைகள், ஊதிய உயர்வு ஏற்புடையதாக இல்லை. புலம்பலாகத்  தான் இருக்கிறது. அரசியல், ஊழல், லஞ்சம், அது இது என்று நிறைய விஷயங்கள் இருப்பினும் இன்றைய கால கட்டத்தில் சட்டம் இயற்றும் திறனுள்ள இந்த உறுப்பினர்களுக்கு இப்போது கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கும் ஊதியம் குறைவே, மற்ற நாடுகளின் நாடாளுமன்ற அல்லது அதற்கு சமமான பதவியில் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியங்களை ஒப்பிட்டு பார்க்கையில்.

உதரனத்திற்க்கு அமெரிக்க செனட்டரின் ஊதியம் வருடத்திற்கு 1,74,000 அமெரிக்க டாலர் அதாவது மாதத்திற்கு 14,500 டாலர். இந்திய மதிப்பில் பார்க்கையில் ஏறத்தாழ  6,75,000 ருபாய்(13 மடங்கு அதிகம்) கனடாவின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 11 மடங்கு(12,611 USD) அதிகம் பெறுகிறார்கள். இங்கிலாந்து உறுப்பினர்கள் 8 மடங்கு அதிகம் அதாவது கிட்டத்தட்ட 4 லட்சம் பிரதி மாதம். ஆஸ்திரேலியாவில் 9,833 USD, ஜப்பானில் 15,200 USD, சிங்கப்பூரில் 4,71,364 ரூபாய், பிரான்சில் 7,002 யூரோ, இத்தாலியில் 5,487 யூரோ, ஜெர்மணியில் 7,688 யூரோ  ஸ்பெயினில் 3,126 யூரோ. மொத்தத்தில் எல்லா நாடுகளை விட நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெகு குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள்.

எது எப்படியோ, பொது மக்களை கருத்து கேட்கும் போது, இவங்களுக்கு எல்லாம் எதுக்கு சம்பளம், சம்பள உயர்வு. சம்பளத்தை நம்பி வாழற மனிதர்களா அவர்கள்  என்று சிரிக்கிறார்கள் அது என்னவோ உண்மை தானே…

இக்கட்டுரையை நக்கீரன் வலைதளத்தில் வெளியிட்டமைக்கு நன்றி

http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=57

 
12500 காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து ஒரு படகு(கட்டுமரம்) தயாரித்து, பசிபிக் பெருங்கடலில் 8000 நாடிக் மைல்களை கடந்து ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியை world water dayவான நேற்று வந்து அடைந்தது. இந்த முயற்சி மக்களுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்க மேற்கொள்ளப்பட்டதாக  பயணம் மேற்கொண்ட குழுவினர் தெரிவுத்துள்ளனர்.
வேடிக்கையாக  சொல்வார்கள் பிளாஸ்டிக்கும் கடவுளும் ஒன்று அவர்களை அழிக்கவே முடியாது  என்று, இன்றைக்கு உள்ள துரித உலகில் பிளாஸ்டிக் நமது அன்றாட வாழ்கையில் மிகவும் இன்றியமையாத ஒரு பங்கு வகிக்கிறது, பிளாஸ்டிக்கின் அழிக்க முடியாத தன்மையினால் அதன் உபயோகத்தை குறைக்க சர்வதேச  அளவில் பெருமுயற்சிகள் எடுக்கபடுகின்றன, இப்போது மறு உபயோகப்படுத்தபடும் பிளாஸ்டிக் தான் பெரும்பாலும் உபயோகத்தில் இருக்கிறது, உபயோகிக்கவேண்டும் என்றும் அரசாங்ககள் கட்டயப்படுத்துகின்றன. இதனை முன்னிருத்தியே  இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது என்கின்றனர் இந்த பிளாஸ்டிக்கி குழுவினர்.
இந்த விழிப்புணர்ச்சி பயணத்தின் மூலம் ஓரிருவர் திருந்தினால் கூட இந்த பயணத்தின் பயன் கிட்டியதாக கொள்ளலாம். பிளாஸ்டிக்கியின் முழு விவரம் அறிய http://www.theplastiki.com இனைய தளத்திற்கு சென்று பாருங்கள்.

 

ஒரே DVD ல் 2 அல்லது 3 திரைப்படங்களை பதிந்து விற்பனைக்கு வருவதை நாம் அறிவோம். DIVX fomrat ஆக இருந்தால் அதிகபட்சமாக 6 திரைப்படங்களை கூட பதிக்கலாம் என்பது எல்லோரும் அறிந்ததே.  ஒரே DVD ல் 2000 படங்களை அல்லது 2 லட்சம் பாடல்களை  பதிக்க கூடிய ஒரு தொழில்நுட்பம் தயாராகி கொண்டிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது இப்போதிருக்கும் DVD யை போன்று 10,000  மடங்கு திறன் கொண்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள SWIRNBURNE என்ற தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் இதற்கான ஆராய்ச்சிகள் வெகு ஜரூராய் நடந்து கொண்டிருகின்றன.  குறுந்தகட்டின் அளவை அதிகரிக்காமலும் கோப்புகளின் bytes அளவை குறைக்காமலும் இந்த தொழில் நுட்பம் மூலம் பதிவு செய்ய முடியும்.  இது நானோ ஸ்ட்ரக்சர்ட் பொலரைசேஷன்(Nano Structured Polarisation) தொழில்நுட்பத்தில்   5 பரிமாணத்தில்  தயாராகிறது. இந்த ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை இது வியாபாரத்திற்கு வர 5 வருடம் ஆகும்,  இந்த ஆராய்ச்சியாளர்கள் சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளதாக  தகவல்.