Posts Tagged ‘bycle thieves’

இந்த படத்தின் கதாநாயகன்  அந்தோனியோ ரிக்கி, போருக்கு பிந்தைய பொருளாதார விழ்ச்சியடைந்த இத்தாலியில் வேலை இல்லா திண்டாட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு மனச்சோர்வு மிக்க குடும்ப தலைவன்.  2 குழந்தைகளுடன் தன் மனைவியையும் காப்பாற்ற வேலைக்காக போராடிக் கொண்டிருந்த வேளையில் அவனுக்கு போஸ்டர் ஒட்டுகிற வேலை கிடைக்கிறது. ஆனால் அதற்கு அவனுக்கு ஒரு மிதிவண்டி தேவைப்படுகிறது, மிதிவண்டி இருக்கும்பட்சத்தில் அவனுக்கு இந்த வேலை உறுதியாக கிடைக்கும். இந்நிலையில் அவனது மனைவி தனது வீட்டில் இருக்கும் பழைய போர்வைகளை தூய்மையாக்கி விற்று  அதற்கு பதிலாக ஒரு மிதிவண்டி வாங்கி கணவனுக்குத் தருகிறாள்.

 வேலைக்கு சேர்ந்த அந்தோனியோ போஸ்டர் ஓட்டுவதற்காக தனது மிதிவண்டி மற்றும் ஏணி சகிதமாய் கிளம்பினான். ஓர் இடத்தில போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கும் போது அவனது மிதிவண்டியை ஒரு திருடன் திருடிக்கொண்டு போய்விடுகிறான். காவலர்களின் உதவியை அந்தோனியோ நாடுகிறான், ஆனால் அவர்கள் இந்த திருட்டை ஒரு பொருட்டாகவே கருதவில்லை அதனால் ரிக்கியும் அவனது நண்பர்களும் ரோம் நகர  தெருக்களில் தன் மிதிவண்டியை தேடி அலைகிறார்கள்.  பல மணி நேர தேடலுக்கு பிறகு மிதிவண்டி கிடைக்காததால் சோர்வுடன்  திரும்புகிறார்கள்.

 மறுநாள் அந்தோனியோவும் அவனது மகனும் ஒரு நண்பனின் உதவியோடு மிதிவண்டி மற்றும் அதன் உதிரி பாகங்கள் விற்கும் இடத்திற்கு சென்று தொலைந்த மிதிவண்டியைத் தேடுகிறார்கள். பயன் எதுவும் இல்லை, அந்தோனியோவின் மனைவி அவனை ஒரு குறி சொல்பவரிடம் அழைத்து சென்று அவனிடம் இருந்த கடைசி பணத்தையும் செலவழிக்கிறான், குறி கேட்டு திரும்பி வரும்போது மிதிவண்டி திருடியவனை அந்தோனியோ பார்க்க நேரிடுகிறது, அவனை துரத்தி ஓடுகிறான். நீண்ட தூரம் துரத்தி திருடனை அவனது இல்லத்துக்கு அருகில் பிடிக்கிறான், ஆனால் சூழ்நிலையை பார்க்கும் போது அவனது மிதிவண்டியை திருடன் விற்றுருப்பான் போலிருந்தது. இந்நிலையில் காவல்அதிகாரி துணை கொண்டு திருடனின் வீட்டில் விசாரணை நடத்துகிறார்கள், ஆனால் அங்கு மிதிவன்டியோ அதன் பாகங்களோ எதுவும் இல்லாததால் வெறும் கையேடு திரும்புகிறார்கள் மேலும் அந்த பகுதி மக்கள் அந்தோனியோவை திட்டி அனுப்புகிறார்கள், ஒரு அப்பாவியின் மேல் ஏன் இப்படி பழி போடுகிறாய் என அவனை வசை மாறி பொழிகிறார்கள். திரும்பி இங்கே வந்தால் தொலைத்து விடுவோம் என மிரட்டி அனுப்புகிறார்கள்.

 படம் முடியும் தருவாயில், அந்தோனியோவும் அவனது மகனும் ஒரு கால் பந்தாட்ட மைதானத்திற்கு வெளியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். மைதானத்தில் இருந்து வெளியே வருபவர்கள் அங்கு கூட்டமாக நிருத்தப்படிருந்த  மிதிவண்டிகளை எடுத்துக்கொண்டு போவதையே பார்த்துகொடிருந்தான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் எழுந்து சிறிது தூரம் சென்று ஒரு ஆள்அரவமில்லாத இடத்தில நிறுத்தப்பட்ட ஒரு மிதிவண்டியை களவாடி கொண்டு போகும் போது பிடிபடுகிறான்.  அவனது மகன் முன்னிலையிலே அவனை பலர் கூடி அடித்து அவனது சுய மரியாதையை இழக்கும் படி செய்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து அவனை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கிறார்கள். அந்தோனியோவின் மகனின் நிலை கண்டு மிதிவண்டியை பறிகொடுத்தவர் அந்தோனியோவை கண்டித்து உன் மகனிற்காக உன்னை விடுவிக்கிறேன் என அவனை மன்னித்து விடுகிறார்.

அந்தோனியோவும் அவனது மகனும் கைகோர்த்து கொண்டு நடந்து சென்று இருட்டில் மறைவது போல படமாக்கியுள்ளார் இயக்குனர். அந்த இருட்டு அந்தோனியோவின் சோகத்தையும், அவன் மனசோர்வையும், இயலாமையையும்  நமக்கு சொல்லாமல் சொல்கிறது.

 யதார்த்த சினிமாவை பற்றி பேசிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அன்றே எடுக்கப்பட்ட இந்த யதார்த்த சினிமாவை பார்க்கும்போது ஒரு நிறைவான படம் பார்த்த உனர்வை கொடுகிறது. 1948 ல் வெளியான இந்த இத்தாலியப் படத்தை இயக்கியவர்  VITTORIO  DE  SICA படத்தில் அந்தோனியோவாக நடித்த LAMBERTO  MAGGIORANI  அவர்களின் நடிப்பும், அந்தோனியோவின் மகன் ப்ருநோவாக  நடித்த  ENZO STAIOLA வின் நடிப்பும் குறிப்பிட்டு சொல்லும் படியாக அமைந்திருகிறது.  இந்த படம் LUIGI BARTOLINI என்பவரின் Ladri di biciclette என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது, படத்தின் இத்தாலிய பெயரும் இதுவே ஆகும்.