Posts Tagged ‘WILLIAM WYLER’

இளவரசர் ஜூதா பென்-ஹார் ஜெருசலத்தில் ஒரு பெரும் வியாபாரி. அவனுடைய பால்ய  நண்பன் மெசல்லா, ஒரு ரோமன், கதை ஆரம்பிக்கும்போது அவன் தனது போர் பயிற்சிகளை எல்லாம் முடித்து  ஒரு படைதளபதியாக தலைநகருக்கு வருகிறான். அவன் தனது ரோமன் என்கின்ற பிறப்பால் இறுமாப்பு கொண்டு பேசலானான் இது ஜூதாவை புண்படுத்துவதாக அமைந்தது காரணம் ஜூதா ஒரு யூதன். ஜூதாவின் வீட்டில் ஒரு அடிமை குடும்பம் இருந்தது. அதில் எஸ்தர் என்ற பணிப்பெண்ணும்  அடக்கம். எஸ்தருக்கு ஜூதாவிற்கும் இடையில் ஒரு ஈர்ப்பு இருந்தது, ஆனால் எஸ்தருக்கு திருமணம் நிச்சயமானது அதன் பொருட்டு அவளுக்கு திருமண பரிசாக அடிமை நிலையில் இருந்து விடுதலை வழங்கினர் ஜூதா. 

இதனிடையில் ஒரு நாள் அந்த பிராந்தியத்துக்கு புது ஆளுனர் நியமிக்கப்பட்டதை ஒட்டி ஒரு சிறிய பேரணி நடந்தது அது ஜூதா வீட்டுக்கு நேரே வரும்போது எதேச்சையாக மாடியின் நின்று பார்த்துகொண்டிருந்த ஜூதா மற்றும் அவரது தங்கை திர்சா மாடியின் கைப்பிடி சுவரை பிடிக்க அது உடைந்து ஆளுனர் தலை மீது சில செங்கற்கள் விழ ரோம வீரர்கள் ஜூதா, அவரது தங்கை திர்சா அவரது தாய் மரியம் ஆகியோரை கைது செய்தார்கள். இந்த நிகழ்ச்சியை காரணம் காட்டி ஜூதா சிரியிலடைக்கப்பட்டு விசரனைகுட்படுத்தப்பட்டான், விசாரணையில்  ஜூதா இந்த நிகழ்ச்சி தற்செயலாக நடந்தது என கூறி வாதிடும் பயனில்லாமல் போனது அவரை ஆயுள்கைதியாக்கி போர் கப்பல்களில், கப்பலை செலுத்தும் அடிமையாக பணித்தனர். 

3 வருடத்துக்கு பிறகு,   அர்ரியஸ் என்பவனின் போர் கப்பலில் பனி புரிந்து கொண்டிருந்தான் ஜூதா, அந்த சமயத்தில் நடந்த ஒரு பெரும் தாக்குதலின் போது ஜூதாவின் திறமையால் அந்த தாக்குதலை இலகுவாக சமாளிக்க  முடிந்தது. இதனால் சந்தோசபட்ட  அர்ரியஸ் தனது செல்வாக்கினால் ஜூலியஸ் சீசர்(மன்னர்), ஜூதாவின் குற்றங்கள் யாவற்றையும் மணிக்குமாறு செய்து அவருக்கு விடுதலை வாங்கி கொடுத்தார். மேலும் ஜூதாவை தனது புதல்வனாக சுவிகாரம் எடுத்துக்கொண்டார். மீட்டு எடுக்கப்பட்ட தனது சுதந்திரத்துடன், செல்வங்களுடனும் ரோமானிய வழிமுறைகளில் ரதம் செலுத்தும் முறையிலும் நல்ல தேர்ச்சி பெற்றார். இந்நிலையில் தனது குடும்பத்தை நினைத்து ஏங்கினார்.  

தனது சொந்தங்களை தேடி வரும் வழியில் ஒரு அரபியனை சந்திக்க நேர்ந்தது அங்கு ஜூதாவின் தேரோடும் வன்மையை பார்த்து அந்த அரபியன் சில நாட்களுக்குள்  நடக்க இருக்கும் பந்தயத்தில் தனது சார்பாக களது கொளுமாறு வேண்டினான் ஆரம்பத்தில் மறுத்துரைத்த ஜூதா, மெசல்லா அந்த பந்தயத்தில் கலந்து கொள்வதை கேள்வி பட்டு தானும் கலந்து கொள்வதாக கூறினான். இதற்கிடையில் அங்கே  ஜூதாவிற்கு திருமணம் நடந்தேறுகிறது. 

ஜூதா, எஸ்தரின் திருமணம் நின்றுவிடதையும், அவள் இன்னும் தன்னை  காதலித்து கொண்டு இருப்பதையும் அறிந்தான்.  தனது தாய் மரியம் மற்றும் தங்கை திர்சாவை சிறையில் இருந்து விடுவிக்குமாறு  மெசல்லாவை வேண்டினான், ரோமானியர்கள் அவர்களுக்கு தொழு நோய் இருப்பதை கண்டறிந்து அப்பொழுதே அவர்களை நகரத்தை விட்டு வெளியேற செய்தனர்.  எஸ்தருக்கு விஷயம் தெரிய வர அதை ஜூதாவிற்கு தெரிவிக்க வேண்டாம் என கூற. எஸ்தர் ஜூதாவின் தாய் மற்றும் தங்கை இறந்து விட்டதாக ஜூதாவிடம் கூற நேர்ந்தது. 

மிகுந்த வன்மத்தோடு பந்தயத்தில் களமிறங்குகிறார் ஜூதா, மெசல்லா சூழ்ச்சியான முறையில் தேரை செலுத்தி ஜூதாவை தோற்கடிக்க போராடி தோற்று இறந்தும் போகிறான். போட்டியில் வெற்றி பெற்ற ஜூதாவை மெசல்லா இறக்கும் தருவாயில் அவனது தாய் தங்கை நகரத்துக்கு வெளியில் இருக்கும் ஒதுக்குபுறமான ஒரு இடத்தில தொழு நோயோடு போராடி கொண்டிருப்பதாக  சொல்லிவிட்டு இறந்து விடுகிறான். 

வன்மத்தோடு இருக்கும் ஜூதா,  மெசல்லாவின் மேலுள்ள கோபம்  நீங்கியவனாக தனது தாய் தங்கையை சந்திக்க நகரத்துக்கு வெளியில் உள்ள ஒரு மலைக்குகைக்கு செல்கிறார். அவரது தாயார் ஜூதாவை சந்திக்க மறுக்கிறார், ஆனால் ஜூதா அவர்களின் மறுப்புரைகளை மீறி  சந்திக்கிறார்,  இந்த தருணத்தில் இயேசு கிருஸ்து உயிர்த்தெழுகிறார். உலக மக்களின் பாவங்களை போக்கும் பொருட்டு தனது இன்னுயிரை ஈந்ததால் அந்த தருணத்தில் ஜூதாவின் தாய் தங்கையின் பினி போங்குகிறது, கதை இனிதாய் முடிகிறது.

லேவ் வாலஷ் என்பவர் 1880 ல் எழுதிய பென்-ஹார்: எ டேல் ஆப் தி  கிரைஸ்ட்  என்ற நாவல் வில்லியம் வயளீர் அவர்களால் 1959ல் இயக்கி வெளியிடப்பட்டது.
 
பென்-ஹார் பெரும் பொருட்செலவில் MGM நிறுவனம் தயாரித்து வெளியிட்டது, ஏறக்குறைய  90 மில்லியன் டாலர் வசூல் சாதனை செய்தது. ஏறத்தாழ 300 அரங்கங்கள் இந்த திரைப்படத்துக்காக பயன் படுத்தப்பட்டன, 340 ஏக்கர் நிலப்பரப்பும் தேவைப்பட்டதாக தகவல்.
 
கப்பல் அரங்கம் மற்றும் தேர் பந்தயம் நடத்தும் விளையாட்டு அரங்கம் இன்றளவும்  சினிமா ரசிகர்களால்
பாராட்டப்படுகிறது. தேர் பந்தயத்தின்போது கேமரா கோணங்களும் ஆக்சன் காட்சிகளும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. 3 மாதம் மற்றும் 15000 துனை நடிகர்கள் சகிதமாக 18 ஏக்கர் நிலப்பரப்பில் படமாக்கபட்டது. 18 தேர் வடிவமைக்கப்பட்டது அதில் பாதிக்கு மேல் ஒத்திகைக்காகவே  பயன்படுத்தப்பட்டது. இந்தப் படம் 11 ஆஸ்கர் விருதுகளை வென்றது, இந்த சாதனையை  பல ஆண்டுகளுக்கு பிறகு டைட்டனிக் திரைப்படம் சமன் செய்தது.
Advertisements

ரோமன் ஹாலிடே 1953ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நகைச்சுவை காதல் சித்திரம். இது வில்லியம் வயளீர் (William Wyler )தயாரித்து இயக்கினார். Gregory  peck, Audrey Hepburn முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று  நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை  john Dighton மற்றும்  Dalton Trumbo என்பவர்களால் எழுதப்பட்டது, சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் இவர்கள்  கம்யுனிச எழுத்தாளர்கள்  என்று  முத்திரை  இடப்பட்டவர்கள் அதனால்  ஹாலிட்டால் ப்ளாக் லிஸ்ட் செய்யப்பட்டவர்கள் அதாவது புறக்கணிக்கப்பட்டவர்கள். Wyler இந்த  கதை சிறப்பாக  இருக்கவே  இதை  பயன்படுத்திக் கொண்டார்  ஆனால் படத்தில்  அவர்கள்  பெயர்களுக்கு  பதிலாக  Ian Mclellan என்பவர்  பெயர்  இடம்  பெற்றிருந்தது.

Ann(Hepburn) ஒரு  இளவரசி, அவர்  ஐரோப்பாவுக்கு(ரோம்) பயணம்  மேற்கொள்கிறார். இவர் அரச குடும்பத்தின் வாரிசு என்பதால் இப்பயணம் ஐரோப்பா முழுவதும் பெருத்த முக்கித்துவத்தை உண்டாக்குகிறது.  ஒரு நள்ளிரவு அவருடைய அரசாங்க கடமைகள், இடையறாத பணிகள் காரணமாக   மிகுந்த மன  உளைச்சலுக்கு  ஆளாகியிருந்த அவருக்கு மருத்துவர் மயக்க ஊசி போட்டு தூங்க வைக்கிறார்.

ஊசி போட்ட பிறகு  மயக்கத்தில்  ரோம் மாளிகையை விட்டு வெளியேறுகிறார் இளவரசி, சிறிது நேரத்தில்    மயக்கத்தின் காரணமாக ஒர் இடத்தில் படுத்து  விடுகிறார்  அங்கே  Joe Bradley (peck)என்ற  டெய்லி  அமெரிக்கன்  பத்திரிகையின்  ரிப்போட்டர் எதேச்சையாக இளவரசியை சந்திக்கிறார். இளவரசியின் நிலை  கண்டு  அவருக்கு  உதவும்  முகமாக  ஒரு டாக்சியில் ஏற்றி, தானும்  ஏறிக்கொள்கிறார். இளவரசி தனது  இருப்பிடம்  பற்றிய  தகவல்  சொல்லும்  நிலையில்  இல்லாததால் அவருடைய வீட்டுக்கே அழைத்து  போக  வேண்டிய  சூழ்நிலை  உருவாகிறது, அன்றிரவு இரவை அங்கேயே கழிக்கிறார்இளவரசி.  காலை  இளவரசி  தூக்கத்திலேயே இருக்கும் நிலையில் joe அவரை அங்கேயே விட்டு விட்டு  வேலைக்கு  சென்று  விடுகிறார்.

பத்திரிகை  ஆசிரியர் தாமதமாக வந்ததற்காக ஜோவை திட்டி தீர்க்கிறார், ரோமிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும்  இளவரசியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு  சென்றதாக  பொய்த் தகவல் தெரிவிக்கிறார். ஆனால் இளவரசி உடல் நிலை சரி  இல்லாததால்  பத்திரிகையாளர் சந்திப்பு நிகழவில்லை என ஆசிரியர் தெரிவித்து  பொய் சொன்ன  ஜோவை  கண்டிக்கிறார், அச்சமயத்தில்  இளவரசியின்  புகைப்படத்தை  பார்த்து  ஆச்சர்யமடைந்த ஜோ,  இரவில் சந்தித்து அவருடைய வீட்டில் தங்கியிருக்கும் பெண் தான் இளவரசி என்பதையுணர்ந்து உடனே  ஆசிரியரிடம்  இளவரசியின் பிரேத்தியக  பேட்டியை  வாங்கி  வருவதாக  பந்தயம்  கட்டி  விட்டு செல்கிறார்.

ஜோ  தனது வீட்டில் தங்கியிருப்பது இளவரசி என உணர்ந்த பிறகு அவசரமாக வீடு  நோக்கி விரைகிறார், இதற்கிடையில்  தனது புகைப்படம்  எடுக்கும்  நண்பரிடம்  விசயத்தை  கூறி  இளவரசிக்கு  தெரியாமல்  அவரை  புகைப்படம் எடுக்க  வேண்டும்  என கேட்டுக்கொண்டு  இளவரசியை  வீட்டில் சந்தித்து ரோமை சுற்றி  காட்டுகிறேன் என அழைக்க,  அதை  இளவரசி மறுத்து  விட்டு இரவு ஜோ வீட்டில் தங்கியதற்கும் மயக்க நிலையில் உதவியதற்க்கும் நன்றி கூறி விடைபெறுகிறார்.

உல்லாசமாக ரோம் நகரை தன்னந்தனியாக சுற்றி வரும் இளவரசி தனது சுதந்திரத்தை முதன் முறையாக  முழுமையாக அனுபவிக்கிறார்.  ஜோ இளவரசிக்கு தெரியாமல்  அவரை பின்  தொடர்ந்து மறுபடியும்   எதேச்சையாக  சந்திப்பது  போல  இளவரசியை சந்தித்து அந்நாள்  முழுவதும் அவரோடு  செலவிடுகிறார்.  இரவு  ஒரு படகில்  நாட்டியமாட  செல்கிறார்கள் இளவரசியும் ஜோவும், ரோம் உளவுத்துறை  இளவரசி அங்கிருப்பதை  அறிந்து  அவரை மீட்டு  வர  அங்கே வருகிறார்கள்  ஆனால் அங்கிருந்து  இளவரசியும்  ஜோவும் உளவாளிகளின்  கண்களில்  மண்ணை தூவி விட்டுத் தப்பிக்கிறார்கள். இந்த ஒரு நாள் நட்பு  இளவரசிக்கு ஜோ   மீது  ஒரு ஈர்ப்பை  உண்டாக்குகிறது அது  காதலாகவும்  மலர்கிறது  ஆனால் இளவரசி இந்த உறவு  தொடரமுடியாத  ஒரு நட்பு என உணர்ந்து   ஜோவை விட்டு ரோமின்  பயண  மாளிகைக்கு  செல்கிறார்.

இதற்கிடையில்  ஜோவின்  பத்திரிகையாசிரியர் இளவரசி காணாமல்  போயிருப்பதையும் ஜோவிற்கு  இளவரசி இருக்குமிடம்  தெரியுமென்பதையும் புரிந்து கொள்கிறார். ஆனால்  ஜோ  இதை மறுத்துவிட இளவரசியோடு  அவருக்குத் தெரியாமல் எடுத்த  புகைப்படங்களையும்  வெளியிடாமல்  தவிர்த்து  விடுகிறார்.

மறுநாள், இளவரசி  பத்திரிகையாளர்  கூட்டத்தில்  ஜோவை சந்திக்கிறார், ஜோவின் புகைப்படமெடுக்கும் நன்பர்  அவர்  எடுத்த புகைப்படங்களை  இளவரசியிடம்  கொடுத்து , அவருடைய ரகசியங்கள்  காப்பற்றப்பட்டதை  சொல்லாமல்  சொல்கிறார்.  இளவரசியும்  ஜோவும் பிரிய  மனமில்லாமல்  பிரிகிறார்கள். அவர்களுடைய  சொல்லமுடியாத, விவரிக்க  முடியாத  காதலை   கண்களால்  பரிமாறி  கொள்கின்றனர்.